பெட்ரோல் டீசல் விலை குறைப்பு... மோடி அரசின் நாடகம்...ரூ.50 குறைத்தால் நிம்மதி... லாலு தாக்கு
மத்திய அரசு நேற்றிரவு பெட்ரோல் டீசல் கலால் வரியை அதிரடியாக குறைத்து அறிவித்தது. இது தேர்தலுக்கான மோடி அரசின் நாடகம், பெட்ரோல் டீசல் விலையில் ரூ.50 குறைத்தால் தான் மக்களுக்கு நிம்மதி என ஆர்ஜேடி தலைவர் லல்லு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் டீசல் வரி குறைப்பு
நாளுக்கு நாள் உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். டீசல் விலை உயர்வால் வாகன போக்குவரத்து விலையும் உயர்ந்து அதன்மூலம் பொருட்களின் விலையும் உயர்ந்தது. இதனால் அரசுக்கு எதிரான மக்களின் கோபாவேசம் அதிகரித்தது.

தீபாவளி பரிசு விலைக்குறைப்பு
தீபாவளி பரிசாக பெட்ரோல் டீசலுக்கான கலால் வரியை மத்திய அரசு ரூ.5 மற்றும் 10 குறைத்தது இதன் மூலம் பெட்ரோல் டீசல் விலை குறைந்ததால் பொதுமக்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தியாவில் பல மாநிலங்கள் கூடுதலாக வாட் வரியையும் குறைத்தன.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை
தமிழகத்தில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக்கடந்து 106 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. அதேபோல் டீசலும் சதமடித்திருந்தது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் வரிக்குறைப்பால் தமிழகத்தில் நேற்றுமுதல் விலைகள் மாற்றி அமைக்கப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் ரூ.106.66 விற்ற பெட்ரோல் ரூ.5.26 குறைந்து ரூ.101.40 க்கு விற்கப்படுகிறது. ரூ.102.59க்கு விற்ற டீசல் லிட்டர் ரூ.11.16 காசுகள் குறைந்து ரூ.91.43க்கு விற்பனையாகிறது.

புதுவையில் அதிரடியாக குறைக்கப்பட்ட விலை
புதுச்சேரி மாநில அரசு தீபாவளி பரிசாக வாட்வரியை குறைத்துள்ளதால் பெட்ரோல் விலை ரூ.13 வரையிலும், டீசல் விலை ரூ.19 வரையிலும் குறைந்து விற்பனையாகின்றது.
புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் விலை நேற்று ரூ.107.79க்கும், டீசல் ரூ.102.66க்கு விற்பனையானது. இந்நிலையில் பெட்ரோல் டீசல்.விலையில் மத்திய அரசு தனது பங்கிற்கு பெட்ரோல் ரூ.5-க்கும், டீசல் ரூ.10 வரையிலும் குறைத்து அறிவித்திருந்தது.

9 பாஜக அரசு ஆட்சி செய்யும் மாநிலங்களில் கூடுதல் வரி குறைப்பு
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில் பாஜக ஆளும் 9 மாநில அரசுகளும் தங்கள் பங்கிற்கு வாட் வரியை குறைத்துள்ளன. அஸ்ஸாம், திரிபுரா,மணிப்பூர், கர்நாடகா, கோவா, உ.பி, குஜராத், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தர்கண்ட் மாநிலங்கள் வாட் வரியை குறைத்துள்ளன.

பெட்ரோல் டீசல் விலைக்குறைப்பு போதாது லாலு
மத்திய அரசு அறிவித்துள்ள பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதால் மக்களுக்கு உண்மையான நிவாரணம் கிடைக்காது என்றும், சட்டசபை தேர்தலுக்கு பிறகு பெட்ரோலிய பொருட்களின் விலை மீண்டும் உயர்த்தப்படும் என்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு போதுமானதாக இல்லை என்று தெரிவித்துள்ளார். பெட்ரோல் விலையை ரூ. 5 குறைத்து மோடி அரசு நாடகம் ஆடுகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.50 குறைக்கப்பட்டால், அது நிம்மதியைத் தரும். உ.பி. தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்படும்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இதேபோன்று ஆர்ஜேடி தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.70 க்குள் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
-
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு












Click it and Unblock the Notifications