ஜெட் வேகம்.. 6 மாநிலங்களில் பெட்ரோல் விலை சதமடித்து சாதனை.. டெல்லியில் லிட்டர் ரூ.95-ஐ தாண்டியது!
டெல்லி: இந்தியாவின் 6 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ.100-ஐ கடந்து சென்றுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை கடந்த 2017-ம் ஆண்டு முதல் தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன.

வாகன ஓட்டிகள் பாதிப்பு
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வந்தது. ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வந்ததால் வாகன ஓட்டிகள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மீண்டும் அதிகரிப்பு
அதன்பின்னர் தமிழகம், புதுவை, கேரளா உள்பட 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. பின்னர் தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் டீசல் விலை வழக்கம்போல் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .95-ஐ தாண்டியுள்ளது.

ஆறு மாநிலங்களில் சதம்
முதல் முறையாக டீசல் லிட்டருக்கு ரூ.86-ஐ தாண்டியுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 பைசா மற்றும் டீசல் 20 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் . பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி சதமடித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை அந்தந்த மாநிலங்களின் வரி விகிதத்தை பொறுத்தும் மாறுபடுகிறது.

சென்னையில் எவ்வளவு?
ராஜஸ்தான் மாநிலம் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது அதிக வாட் வரி வசூலிக்கிறது, அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் அதிக வரி விதிக்கப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை பெட்ரோல் லிட்டருக்கு 96.47 ரூபாய், டீசல் லிட்டருக்கு 90.66 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications