இலங்கை நிலையா? இந்தியா முழுவதும் அச்சுறுத்த தொடங்கும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு - பங்குகள் மூடல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக உயர்த்தி வந்ததால் பெட்ரோல் ரூ.110க்கும், டீசல் ரூ.100 யும் தாண்டி விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததால் விலை சற்று சரிந்தது.

எரிபொருள் விநியோகம்

எரிபொருள் விநியோகம்

ஆனால், இதற்கு எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல் பங்கு உரிமையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. கலால் வரி குறைப்பால் பெங்களுக்கு ஏற்படும் இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் சரிகட்ட வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களிடம் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக பெட்ரோல் பங்குகளுக்கான எரிபொருள் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்ததாக கூறப்படுகிறது.

ராஜஸ்தானில் மோசமாகும் நிலைமை

ராஜஸ்தானில் மோசமாகும் நிலைமை

இதன் காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 4,500 பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டு உள்ளன. தங்கள் பங்குகளுக்கு எண்ணெய் விநியோகம் வழங்குமாறு எண்ணெய் நிறுவனங்களில் பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் காத்துள்ளனர்.

காலியாகும் பெட்ரோல், டீசல்

காலியாகும் பெட்ரோல், டீசல்

மறுபுறம் பொதுமக்களும் பெட்ரோல் பங்குகளுக்கு வந்து மூடிக்கிடப்பதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். குறிப்பாக குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அதிகரித்து இருக்கிறது. பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக தகவல் பரவி வருவதால் பொதுமக்களும் வேகமாக பெட்ரோல், டீசலை நிரப்பி வருவதால் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டிலும் தட்டுப்பாடு

தமிழ்நாட்டிலும் தட்டுப்பாடு

தமிழ்நாட்டிலும் புறநகர் பகுதிகளில் உள்ள பல பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வரும் இந்த பிரச்சனையால் பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். எரிபொருள் இல்லாததால் புறநகர்களில் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டு உள்ளன. தட்டுப்பாட்டை காரணம் காட்டி லாரிகளுக்கு குறிப்பிட்ட அளவிலேயே டீசல் வழங்கப்படுவதாக அதன் உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பதுக்கல் புகார்

பதுக்கல் புகார்

இதனிடையே கூடிய விரைவில் எரிபொருள் விலை மீண்டும் உயரக்கூடும் என்பதால் எண்ணெய் நிறுவனங்கள் பதுக்கலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடி தீர்வை காண வேண்டும் என லாரி உரிமையாளார்கள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+