இந்தியா சுட்டு வீழ்த்திய பாக். எப் 16 போர் விமானம் இதுதான்.. பரபர படங்கள் வெளியானது!
எப் 16 போர் விமானத்தின் பாகங்கள் புகைப்படங்களாக வெளியிடப்பட்டுள்ளன.
Recommended Video

டெல்லி: இந்திய ராணுவம் நேற்று எல்லையில் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தின் பாகங்கள் புகைப்படங்களாக தற்போது வெளியாகியுள்ளன.
காஷ்மீரில் 40 இந்திய சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதும், இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது. இதனால் பதற்றம் ஏற்பட்டு, எந்த நேரம் இரு நாட்டுக்கும் போர் வந்துவிடுமோ என்ற அச்சம் உலகம் முழுவதும் சூழ்ந்துள்ளது.
நிமிடத்துக்கு நிமிடம் இந்த தாக்குதல் மற்றும் பதிலடி குறித்த தகவல்கள் வந்து கொண்டே இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படித்தான் நேற்று, விமான தாக்குதல் நடந்ததை அதாவது, இந்திய விமானங்கள் அழிக்கப்பட்டதாக பாகிஸ்தான் டிவி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் நிறைய போட்டோக்கள், வீடியோக்கள் வெளியாகியும் பகிரப்பட்டும் வந்தன.

போலியானவை
அதில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் சுட்டு வீழ்த்திய மிக் 21 போர் விமானம் இதுதான் என்றும் ஒரு விமானம் காட்டப்பட்டது. அந்த விமானத்தின் வால் பகுதியில் எந்தவித சேதாரமும் இல்லை என்றாலும், விமானத்தின் முன்பகுதி முற்றிலும் நாசமாகி இருந்தது. இதையெல்லாம் பார்த்ததும் நாட்டு மக்கள் பதறி போனார்கள். ஆனால் இந்த போட்டோ, வீடியோ எல்லாம் உண்மை கிடையாது, போலியானவை என்று பின்னர் தெரிய வந்தது.

ஒரிஜினல் F-16
இந்நிலையில், நேற்று எல்லையில் இந்தியா சுட்டு வீழ்த்திய பாகிஸ்தானின் F-16 என்ற விமானத்தின் உண்மையான புகைப்படம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒரிஜினல் F-16 போர் விமானத்தின் பாகங்களுடன் ஒப்பிட்டு வீழ்த்தப்பட்ட விமான பாக புகைப்படத்தை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
|
பாகிஸ்தான் விமானம்
இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்திய விமானத்தின் பாகம் என்று நேற்றெல்லாம் பாகிஸ்தான் முழுவதும் இந்த படம்தான் காட்டப்பட்டது. ஆனால் இது பாகிஸ்தான் விமானத்தின் பாகம் என்பது இப்போதுதான் தெரியவந்துள்ளது.

நொறுங்கிய விமானம்
தரையில் விழுந்து கிடக்கும் இந்த விமானத்தின் அருகிலேயே பாகிஸ்தான் வீரர்கள் நொறுங்கிய பாகத்தை உற்று நோக்குவது போலவும் பார்வையிடுவதும்போலவும் நின்றுகொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த விமானத்தில் இருந்த பாகிஸ்தான் விமானி என்ன ஆனார் என்று தெரியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications