“காக்கை குருவி எங்கள் ஜாதி”.. ஒரு வயதிலேயே இப்படி ஒரு நல்ல குணமா.. சபாஷ் குட்டிப்பையா..!
ஒரு வயது சிறுவன் சிட்டுக்குருவிகளுக்கு உணவளிக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன.
டெல்லி: ஒரு வயது சிறுவன் ஒருவன் சிட்டுக்குருவிகளுக்கு உணவளிக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன.
சமூகவலைதளங்களில் ஏராளமான விநோதமான, மனதை கவரும் புகைப்படங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் சில நம் மனதை நெகிழ வைத்துவிடும். அப்படிப்பட்ட சில புகைப்படங்கள் தான் தற்போது சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.

சம்பந்தப்பட்ட அந்த புகைப்படங்களில் ஒரு வயதேயான சிறுவன் ஒருவன் தான் வைத்திருக்கும் பையில் இருந்து தானியங்களை எடுத்து கீழே போடுகிறான். பின்னர் அந்த தானியங்களை ஏராளமான சிட்டுக்குருவிகள் வந்து சாப்பிடுகின்றன. அதை வாஞ்சையோடு பார்த்துக்கொண்டிருக்கிறான் அந்த சிறுவன்.

இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள சிறுவனின் தந்தை, தனது மகனின் செயலை பார்த்து பெருமிதம் கொண்டிருக்கிறார். "ஒரு வயதேயான எனது மகன் சிட்டுக்குருவிகளுக்கு உணவளித்து, அவை சாப்பிடுவதை பார்த்துக்கொண்டிருக்கிறான். அவனது இந்த உணர்வு எப்போதும் இருக்கும் என நம்புகிறேன். குறைந்தபட்சம் 20 சிட்டுக்குருவிகளையும், 2 புறாக்களையும் பார்க்க முடிந்தது", என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள், அந்த சிறுவனை புகழ்ந்து வருகின்றனர். குழந்தைகளை இது போன்று பழக்கப்படுத்தி வளர்ப்பது, அவர்களுள் மனிதத்தை நிரம்ப செய்யும் என பலரும் வாழ்த்தி வருகின்றனர். பறவைகளுக்கு உணவளிப்பது மிக உன்னதமான பொழுதுபோக்கு எனவும், குழந்தைகளுக்கு அவை மிகவும் பிடித்தமானதாக இருக்கும் எனவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்குமானது என்பதை சிறுவயதில் இருந்தே சொல்லிக் கொடுத்து வளர்ப்பதன் மூலம், குழந்தைகளை நாளைய இந்தியாவின் சிறந்த குடிமகன்களாக உருவாக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்திருக்க வாய்ப்பில்லை.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications