வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது திருப்புமுனை! பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது திருப்புமுனை என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருக்கிறார். இன்றுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடையும் நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதா நீண்ட நேர விவாதத்திற்கு பின்னர் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வக்பு சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றுவது என்று மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதனையடுத்து கடந்த புதன்கிழமை மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சுமார் 12 மணி நேர விவாதத்திற்கு பின்னர் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகியிருந்தன.
இதனை தொடர்ந்து மாநிலங்களவையில் நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நள்ளிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் ஆதரவாக 128 வாக்குகளும், எதிராக 95 வாக்குகளும் பதிவாகியிருந்தன. திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். பாமக இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது. அதே நேரம் தமிழ் மாநில காங்கிரஸின் எம்பி ஜி.கே.வாசன் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.
இந்நிலையில் மசோதா குறித்து தனது x தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, "வக்பு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டிருப்பது ஒரு திருப்புமுனையாகும். நாட்டின் சமூக பொருளாதார நீதி, வெளிப்படைத்தன்மை,அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் வக்பு மசோதா ஒரு திருப்புமுனை. நீண்டகாலமாக குரல்களற்று, வாய்ப்புகள் வழங்கப்படாமல் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு வக்பு மசோதா பயனளிக்கும்.
இந்த மசோதாக்களுக்கு ஆதரவளித்த அனைத்து எம்பிக்களுக்கும் நன்றி. நாடாளுமன்ற குழுவிற்கு மக்கள் அனுப்பிய முக்கியமான ஆலோசனைகளும் இந்த மசோதா வலுப்பெற உதவியிருக்கிறது. இப்போது இந்தியா சமூக நீதியை முன்னிலைப்படுத்தும் மக்களின் உணர்வுகளை மதிக்கும் நவீன சட்ட கட்டமைப்புக்குள் நுழைகிறது. ஒவ்வொரு இந்திய குடிமகனின் கண்ணியத்தையும் பாதுகாப்பது முக்கியமான இலக்காக இருக்கிறது. இதன் மூலம் ஒருமைப்பாட்டையும், கருணையையும் அடிப்படையாக கொண்ட ஒரு வலுவான இந்தியாவை உருவாக்க முடியும்" என பிரதமர் கூறியுள்ளார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications