முக்கிய அறிவிப்பு.. இன்று இரவு 8 மணி அளவில் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
டெல்லி: கொரோனாவை எதிர்கொள்வது குறித்தும், அதற்கு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் இன்று இரவு 8 மணி அளவில் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
Recommended Video
இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 136 ஆக இருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 26 உயர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக. மகாராஷ்டிராவில் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்ததாக கேரளாவில் 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். உத்தரப்பிரதேசத்தில் 16 பேரும் கர்நாடகாவில் 11 பேரும் கொரோனா தாக்கத்தால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். டெல்லியில் வெளிநாட்டவர் ஒருவர் உட்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஒருவர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். தெலுங்கானா, ஆந்திரா, மேற்கு வங்காளம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவி உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுஇடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களிடையே கொரோனாவை எதிர்க்கொள்வது குறித்து விழிப்புணர்வை அரசு மேற்கொண்டு வருகிறது.
PM Shri @narendramodi will address the nation on 19th March 2020 at 8 PM, during which he will talk about issues relating to COVID-19 and the efforts to combat it.
— PMO India (@PMOIndia) March 18, 2020
இந்நிலையில் கொரோனாவை எதிர்கொள்வது குறித்தும், அதற்கு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி தலைமையில் நேற்று உயர்மட்டக்குழு கூடி ஆலோசித்தது. அப்போது பிரதமர் மோடி கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க போராடி வரும் அனைத்து துறையினரையும் பிரதமர் மோடி பாராட்டினார். மாநில அரசுகளை உத்வேகத்துடன் செயல்படுமாறு அறிவுறுததினார்.
இந்நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் கொரோனா பாதிப்பு குறித்தும் , அதை எதிர்கொள்வது குறித்தும் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே பேச உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications