சுஷ்மாவின் உடலை பார்த்து துக்கம் தாளாமல் கண்ணீர் விட்ட பிரதமர் மோடி, அத்வானி!
டெல்லி: மறைந்த சுஷ்மா ஸ்வராஜுக்கு அஞ்சலி செலுத்த சென்ற பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக மூத்த தலைவர் அத்வானியும் துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டனர்.
முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இரவு திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 67. அவரது மரணச் செய்தி கேட்டு பாஜகவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் அவரது உடலுக்கு பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, மூத்த தலைவர்கள், ராகுல்காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

துக்கம்
இந்த நிலையில் பிரதமர் மோடி, சுஷ்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்தார். பின்னர் மகள் பன்சூரிக்கும் சுஷ்மாவின் கணவருக்கும் ஆறுதல் கூறினார் மோடி. சிறிது நேரம் அங்கிருந்த மோடிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

அத்வானி
இதையடுத்து அவர் கண்ணீர் விட்டு அழுதார். அது போல் பாஜக மூத்த தலைவர் அத்வானியும் சுஷ்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது சுஷ்மாவின் உடலை கண்டு அழுதார். அத்வானியின் மகள் பிரதீபா, சுஷ்மாவின் மகள் பன்சூரிக்கு கண்ணீர் விட்டு ஆறுதல் கூறினார்.

மரணம்
முன்னதாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் சுஷ்மா மறைவு குறித்து கூறுகையில் இந்திய அரசியலில் மாபெரும் அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது. தனது வாழ்க்கை முழுவதையும் பொதுச் சேவைக்காகவே ஒப்படைத்த ஒரு மாபெரும் தலைவரின் மரணத்தால் நாடே சோகமாகியுள்ளது.

தனி முத்திரை
ஏழைகளின் உயர்வுக்காக தொடர்ந்து பாடுபட்டவர் சுஷ்மா சுவராஜ். பல கோடி மக்களுக்கு ஆதர்ச சக்தியாக உதாரணமாக திகழ்ந்தவர் சுஷ்மா சுவராஜ். மிகச் சிறந்த நிர்வாகி, தான் பதவி வகித்த அமைச்சரவையில் தனி முத்திரை பதித்தவர் சுஷ்மா சுவராஜ்.

வெளிநாடு
வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியபோது வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் நலனில் தனி அக்கறை காட்டினார். பலருக்கு உதவியுள்ளார். அனுதாபத்துடன் செயல்பட்டார் என்று மோடி புகழாரம் சூட்டியிருந்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications