காஷ்மீர் அட்டாக் நடந்ததும்.. ரூட்டை மாற்றி பயணித்து இந்தியா வந்த மோடி! பரபரத்த வான் எல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து சவுதி அரேபியாவில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி அவசரமாக நாடு திரும்பி உள்ளார். இதற்காக பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தாமல் தவிர்த்து உள்ளார்.

தனது சவுதி பயணத்தை பாதியில் நிறுத்திக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இந்தியா திரும்புகையில் அவரின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியை தவிர்த்தது. பொதுவாக சவுதி டூ இந்தியா ரூட்டில் செல்ல பாகிஸ்தான் வான்வழி பயன்படுத்தப்படும்.

அதன்படியே பிரதமர் மோடியின் IAF போயிங் 777-300 (K7067) நேற்று செவ்வாய்க்கிழமை சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்திற்கு செல்லும் போது பாகிஸ்தான் வான்வெளியில் பறந்து சென்றது. ஆனால் திரும்பி வரும் போது அதே விமானம் குஜராத் வழியாக டெல்லி திரும்பியது. ஓமான் வழியாக முழுக்க முழுக்க அரேபியன் கடல் பகுதியை பயன்படுத்தி டெல்லிக்கு வந்துள்ளார் பிரதமர் மோடி.

இதனால் ஒன்றரை மணி நேரம் பயணம் அதிகரித்தாலும் ரூட்டை மாற்றி உள்ளார் மோடி. இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. ஒன்று பாகிஸ்தானுக்கு காட்டப்படும் அடையாள எதிர்ப்பு இது. இரண்டாவது பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த அவர்களின் தரைதளத்துடன் பேச வேண்டும். அதை இந்தியா இப்படிப்பட்ட சூழலில் விரும்பவில்லை.

அதோடு பாகிஸ்தானை இப்போது பாதுகாப்பு ரீதியாக நம்ப முடியாது. மேலும் பாகிஸ்தான் போர் விமானங்கள் தற்போது எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தும் என்ற அச்சம் உள்ளதால் பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதை எல்லாம் தவிர்க்க மோடி வேறு ரூட்டை எடுத்துள்ளார்.

சவுதிக்கு மோடி பல ஒப்பந்தங்களை மேற்கொள்ள சென்றிருந்தார். இந்தியா - சவுதி இரு நாடுகளும் பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் உட்பட பல விஷயங்களில் நெருக்கமாகி உள்ளன. பிரதமர் மோடியின் சவுதி அரேபியா பயணத்தின் போது, ​​இரு நாடுகளும் குறைந்தது ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoUs) கையெழுத்திட இருந்தன. இரு தரப்பும் விண்வெளி, ஆற்றல், சுகாதாரம், அறிவியல் மற்றும் ஆராய்ச்சி, கலாச்சாரம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம், ஏஐ, கட்டுமானம், சுற்றுலா ஆகிய துறைகளில் ஒப்பந்தங்களில் இரண்டு நாடுகளும் கையெழுத்திடும் நிலையில் இருந்தன.

PM Modi avoided flying over Pakistan after Jammu Kashmir Pahalgam attack

ஆனால் அதை கைவிட்டு மோடி இந்தியா திரும்பி உள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து சவுதி அரேபியாவில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி அவசரமாக நாடு திரும்பி உள்ளார்.

தாக்குதல் விவரம்

தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது லஷ்கர்-இ-தொய்பா (LeT) உடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் குழு தாக்குதல் நடத்தியது.இதில் 28 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கு வழியாக சுற்றுலா சென்ற அப்பாவி சுற்றுலா பயணிகள் 27 பேரை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் வழிமறித்து மிக கொடூரமாக சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். இந்த படுகொலை சம்பவம் ஒட்டுமொத்தமாக உலக நாடுகளையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி செல்வார்கள். இந்நிலையில் இன்று மாலை பயங்கரவாதிகள் திடீரென உள்ளே புகுந்தனர். பிரபலமான ரிசார்ட் பகுதிக்கு அருகே சுற்றுலா பயணிகளை சரமாரியாக சுட்டுள்ளனர்.

பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பாவின் (எல்இடி) பினாமி அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பு பஹல்காமில் நடந்த இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுள்ளது. முக்கியமாக ஒவ்வொருவரையும் சுடும் முன் அவர்கள் இந்துக்களா என்பதை உறுதி செய்ய கீழாடையை உருவி பார்த்துவிட்டு சுட்டுக்கொன்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+