பிரதமர் மோடி சாதனை.. யூட்யூப்பில் நம்பர் 1.. உலக தலைவர்களிலேயே அதிக ஃபாலோவர் இவருக்குதான்!
டெல்லி: உலகளவில் யூடியூப்பில் அதிக சப்ஸ்கிரைபர்களை கொண்ட தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து நீடித்து வருகிறார். இந்நிலையில் தான் உலக தலைவர்கள் தங்களின் யூடியூப்பில் உள்ள சப்ஸ்கிரைபர்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தற்போது பொதுமக்கள் அனைவரும் செல்போன்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதோடு இணையதளங்களில் அதிக நேரத்தை மக்கள் செலவிடுகின்றனர். மேலும் பல்வேறு வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் பொதுமக்களிடம் தொடர்பில் இருக்கும் வகையில் உலக தலைவர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி வைத்துள்ளனர். எக்ஸ், முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்பட பிற வலைதளங்களில் தலைவர்கள் கணக்கு தொடங்கி அதில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில் யூடியூப்பில் அதிக சப்ஸ்கிரைபர்களை கொண்ட தலைவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சேனலை 20 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம் அதாவது மொத்தம் 2 கோடி பேர்) பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.
இந்த 2 கோடி சப்ஸ்கிரைபரை பிரதமர் நரேந்திர மோடி இன்று கடந்தார். இந்த பட்டியலில் ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி தான் முதலிடத்தில் இருந்த நிலையில் அவரது யூடியூப் சேனல் 2 கோடி சப்ஸ்கிரைபர்களை எட்டியுள்ளது. அதோடு வியூஸ் அடிப்படையிலும் பிரதமர் மோடியின் யூடியூப் தான் யாரும் தொடமுடியாத உச்சத்தில் உள்ளது. டிசம்பர் மாதத்தில் இதுவரை 2.24 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடியாகும்) சப் வியூசை பெற்றுள்ளது.
பிரதமர் மோடிக்கு அடுத்ததாக பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனோரா 2வது இடத்தில் உள்ளார். இவருக்கு மொத்தம் 6.4 மில்லியன் (64 லட்சம்) யூடியூப் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். மேலும் 3 வது இடத்தில் 1.1 மில்லியன் (11 லட்சம்) சப்ஸ்கிரைபர்களுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளார். இதையடுத்து 4வது இடத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்ளார். ஜோபைடனின் யூடியூப் சேனலை வெறும் 7 லட்சத்து 94 ஆயிரம் பேர் மட்டுமே சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications