கம்மல் அணிந்து ஓமனில் இறங்கிய பிரதமர் மோடி? காதை கவனிச்சீங்களா.. பரவும் வீடியாவின் பின்னணி
டெல்லி: பிரதமர் மோடி 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து நாடு திரும்பி உள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் மோடி தனது காதில் ஓமனில்கம்மல் அணிந்திருப்பதாக வீடியோ பரவி வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு சென்ற பிரதரமர் மோடி தற்போது டெல்லிக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் மோடி ஓமன் நாட்டுக்கு சென்று அங்கு இருநாடுகளின் வர்த்தகம் பற்றி விவாதித்தார்.

இந்நிலையில் தான் ஓமனில் பிரதமர் மோடி தனது காதில் கம்மல் அணிந்திருந்ததாக கூறி வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
அதாவது எத்தியோப்பியா நாட்டில் இருந்து பிரதமர் மோடி ஓமன் தலைநகர் மஸ்கட் விமானத்தில் தரையிறங்கினார். ஓமன் துணை பிரதமர் சையத் ஷிஹாப் பின் தாரிக் அல் சையத், பிரதமர் மோடியை வரவேற்றார். இந்த வேளையில் பிரதமர் மோடியின் காதில் கம்மல் போன்று ஒன்று இருந்தது. இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவ தொடங்கியது.
பிரதமர் மோடி தனது உடை அலங்காரம் தொடர்பாக அவ்வப்போது டிரெண்டாவது வழக்கம். இந்நிலையில் தான் பிரதமர் மோடி காதில் கம்மல் அணிந்துள்ளதாக நெட்டிசன்கள் இணையத்தில் பரப்ப தொடங்கினர். இதுபற்றி விசாரித்தபோது பிரதமர் மோடியின் காதில் இருந்தது என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஓமன் தலைநகர் மஸ்கட் விமான நிலையத்தில் பிரதமர் மோடி தரையிறங்கியபோதுஅவரது காதில் கம்மல் எதுவும் அணியவில்லையாம். மாறாக பிரதமர் மோடியின் காதில் கம்மல் போல் காட்சியளித்தது மொழிப்பெயர்ப்பு சாதனம் என்பது உறுதி செய்ப்பட்டுள்ளது. பொதுவாக வெளிநாட்டு பயணங்களின்போது சில தலைவர்கள் உள்ளூர் மொழிகளில் பேசுவார்கள். அது பிரதமர் மோடிக்கு தெரியாது. இதனால் மொழிப்பெயர்ப்பு கருவிகள் பயன்படுத்தப்படும்.
ஓமன் நாட்டின் அலுவல் மொழியாக அரபு உள்ளது. தலைவர்கள் பெரும்பாலும் அரபு மொழிகளில் தான் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். இதனால் பிரதமர் மோடி நேரடி மொழிப்பெயர்ப்புக்காக அந்த சாதனத்தை தனது காதில் அணிந்திருந்தது தெரியவந்துள்ளது. அந்த சாதனம் தான் கம்மல் போல் பார்வையாளர்களின் கண்களுக்கு தெரிந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications