மாறும் சர்வதேச நிலைமை.. எலான் மஸ்க் உடன் போனில் பேசிய பிரதமர் மோடி! விஷயம் இதுதான்
டெல்லி: இந்திய தொலைத்தொடர்பு துறையில் முதலீடு செய்ய எலான் மஸ்க் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், இன்று மஸ்க் உடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
என்ன பேசினோம் என்பது பற்றி பிரதமர் தனது x தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அவரது பேச்சும், பதிவும் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் வாஷிங்டன் டிசியில் வைத்து எலான் மஸ்கை மோடி சந்தித்திருந்தார். அப்போது பேசப்பட்ட விஷயங்கள் தொடர்பாக இன்று தொலைபேசி உரையாடலில் பேசப்பட்டது என்றும், தொழில்நுட்ப துறையில் இந்தியா மற்றும் மஸ்கின் நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு தொடர்பாகவும் போனில் பேசப்பட்டதாக மோடி தனது x தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
எலான் மஸ்க் தற்போது அமெரிக்க ஆட்சி நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். திறனாய்வு துறை எனும் துறைக்கு இவர்தான் தலைவர். ஏராளமான அரசு துறை பணியார்களை இவர் வேலையை விட்டு அனுப்பியிருக்கிறார். கேட்டால் செலவீனத்தை குறைப்பதற்கு இப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்.
சமீப காலமாக இந்திய தொலைத்தொடர்பு துறையில் இவர் முதலீடு செய்ய வேண்டும் என்று முயன்று வருகிறார். இவரது ஸ்டார்லிங்க் எனும் நிறுவனம் செல்போன் டவர் இன்றி இணைய தொடர்பை வழங்கி வருகிறது. அந்த இந்தியாவில் இந்த சேவையை இவர் தொடர முயன்று வருகிறார். அதேபோல, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் ஸ்டார்லிங்க் தொழில்நுட்பத்தினை உற்பத்தி செய்யவும் மஸ்க் ஆர்வம் காட்டி வருகிறார். எதிர்காலத்தில் அவர் எந்த மாதிரியான முதலீடுகளை செய்யப்போகிறார் என்பது இன்னும் கொஞ்ச நாட்களில் தெரிந்துவிடும்.
ஒருவேளை மஸ்க், இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை தொடங்கிவிட்டால் இந்தியாவில் உள்ள மற்ற டெலிகாம் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும். குறிப்பாக ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் இழப்பை சந்திக்க நேரிடலாம். ஏற்கெனவே ஏர்டெல்லும் வோடஃபோனும் தங்களது லாபத்தை அதிகரிக்க முடியாமல் தவித்து வருகின்றன. இப்படி இருக்கையில், எலான் மஸ்க்கின் என்ட்ரி, போட்டியை தீவிரமாக்கும் என சொல்லப்படுகிறது.
-
பிரதமர் மோடி மக்களுக்கு மீண்டும் ஒரு வேண்டுகோள்.. கங்காநகர் தெரியுமா? இந்தியாவை மிரட்டும் ஒரு விஷயம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications