மோடியும் நானும்...ரகசியத்தை பகிர்ந்த கிரில்ஸ்...2 ஆண்டுகளுக்கு பின் வைரலாகும் போட்டோ
டெல்லி : மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றை தற்போது பகிர்ந்து கொண்டுள்ள பியர் கிரில்ஸ், அதன் பின்னணியில் உள்ள ரகசியத்தை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோ 2 ஆண்டுகளுக்கு பின் தற்போது வைரலாகி வருகிறது.
2019 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வித் வைல்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் உடன் பிரதமர் மோடி வனப்பகுதியில் சுற்றிய அனுபவங்கள் இடம்பெற்றன. இந்த நிகழ்ச்சியில் மோடியுடன் எடுத்துக் கொண்ட, தனக்கு பிடித்த போட்டோக்களை கிரில்ஸ் தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இதில், ஈரமான உடையுடன், ஆற்றங்கரையில் அமர்ந்து மோடியும், கிரில்சும் டீ குடிப்பது போன்ற போட்டோ அதிக நபர்களால் பகிரப்பட்டு, வைரலாகி வருகிறது. இந்த போட்டோவிற்கு பின் உள்ள கதையை கிரில்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், எனக்கு பிடித்த போட்டோக்களில் ஒன்று : ஈரத்துடன், இருவரும் டிஸ்கவரி ஜங்கிளில் பங்கேற்ற பிறகு பிரதமர் மோடியும் நானும் டீ குடித்த தருணம். இந்த போட்டோவின் பின்னணியில் மிதவை ஒன்று உள்ளது. அதை பிடித்துக் கொண்டு இருவரும் இருந்தோம். அவர் அதன் மீது ஏறிக் கொண்டார். நான் அவருடன் நீந்தி இருவரும் கரை சேர்ந்தோம். அவரது பாதங்கள் ஈரம் ஆகாது என இந்திய ரகசிய சேவை பிரிவினருக்கு நான் வாக்களித்திருந்தேன். ஆனால் அப்படி சரியாக நடக்க முடியவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
வாழ்க்கையில் மறக்காத இந்த நிகழ்ச்சி, இது போன்ற பல கதைகளையும் நான் தவறாமல் எனது சுயசரிதையில் குறிப்பிடுவேன் எனவும் கிரில்ஸ் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தலைப்புக்கள் மற்றும் முகமூடிகளுக்கு பின் நாம் அனைவரும் ஒன்று தான். வனத்தில் நாம் அனைவரும் ஒன்று தான் என்பதை இந்த தருணம் நினைவூட்டுகிறது. 2 பேர் டீ குடித்து கொண்டிருப்பது மட்டும் தான் இந்த போட்டோவில் தெரியும். இதன் பின்னணியில் இருக்கும் இது போன்ற பல கதைகளை வரவிருக்கும் எனது சுயசரிதையில் மறக்காமல் குறிப்பிடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பியர் கிரில்ஸ் உடன் உத்திரகாண்ட் தேசிய பூங்காவில் சுற்றிய அனுபவம் பற்றி மோடி கூறுகையில், நாம் இயற்கையுடன் சார்ந்து வாழ்ந்தால் எதுவும் தவறாகாது என கூறி இருந்தார். இவர்களின் இந்த அனுபவத்துடனான போட்டோ, இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications