மாடுகளை கட்டி அணைத்து, உச்சி முகர்ந்து உணவூட்டிய பிரதமர் மோடி.. மகர சங்கராந்தியை ஒட்டி உற்சாகம்!
டெல்லி: டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் வீட்டில் இன்று காலை பொங்கல் விழா கொண்டாடிய பிரதமர் மோடி, அதன் பிறகு தனது இல்லத்தில் மாடுகளுக்கு உணவளித்து மகிழ்ந்தார்.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதியான நாளை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி பலரும் தங்களது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். அதன்படி, டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வீட்டில் இன்று காலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் கரகாட்டம், சிலம்பாட்டம், பாடல் பாடுதல், பறையாட்டம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
பொங்கல் விழா மேடையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் என தமிழ் மொழியில் வாழ்த்து கூறினார். மேலும் 'தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு' என்ற திருக்குறளை தமிழில் சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பேசினார். பின்னர் அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழர் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன.

தொடர்ந்து, மகர சங்கராந்தியை முன்னிட்டு தனது இல்லத்தில் மாடுகளுக்கு புல் மற்றும் உணவுகளை வழங்கினார் பிரதமர் மோடி. டெல்லியில் உள்ள தனது இல்லத்தில், ஏராளமான மாடுகளுக்கு உணவளித்து மகிழ்ந்தார் பிரதமர் மோடி. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை எனக் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளைப் போல, இந்தியாவின் பல பகுதிகளிலும் தை ஒன்றாம் நாள், மகர சங்கராந்தி, மகா பிஹு என பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. விவசாயம் செழிக்கச் செய்யும் சூரியக் கடவுளை வணங்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.


-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications