ஆந்திரா - தெலங்கானாவை இணைக்கும் புதிய வந்தே பாரத் ரயில்.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
டெல்லி: ஆந்திராவின் விசாகப்பட்டினத்தையும், தெலங்கானாவின் செகெந்திராபாத்தையும் இணைக்கும் புதிய 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த ரயிலுடன் சேர்த்து இதுவரை 8 'வந்தே பாரத்' ரயில்கள் இந்தியாவில் மக்கள் பயன்பாட்டுக்கு இயங்கி வருகின்றன.
இந்த ரயில் சேவையை டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்த பிரதமர் மோடி, 'வந்தே பாரத்' ரயில்கள் இந்தியாவின் அடையாளமாக திகழ்வதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.

அடுத்தடுத்து களமிறங்கும் 'வந்தே பாரத்' ரயில்கள்
இந்தியா முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில் 'வந்தே பாரத்' ரயில் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. டெல்லி - வாரணாசி, டெல்லி - காத்ரா, குஜராத் மாநிலம் காந்திநகர் - மும்பை, இமாச்சலப் பிரதேசத்தின் அம்ப் அண்டவ்ரா - புதுடெல்லி, கர்நாடகாவின் மைசூரு - சென்னை உட்பட 7 'வந்தே பாரத்' ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்படும் ரயில் என்பதால், இந்திய மக்கள் மத்தியில் இந்த ரயிலுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.

விமர்சனத்திற்கு குறைவில்லை
மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ள போதிலும், அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருவதால் 'வந்தே பாரத்' ரயில்கள் அதிக அளவில் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகின்றன. பல்வேறு ரயில் தடங்களில் ஓடிய 'வந்தே பாரத்' ரயில்கள் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகின. இதில் ரயில்களின் முன்பகுதிகள் கடுமையாக சேதம் அடைந்தன. ஃபைபர் பிளாஸ்டிக்கால் 'வந்தே பாரத்' ரயிலின் முகப்பு பாகங்கள் செய்யப்பட்டுள்ளதால் அவை இவ்வாறு சேதம் அடைகின்றன. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகின.

ஆந்திரா டூ தெலங்கானா..
இந்நிலையில், ஆந்திராவின் விசாகப்பட்டினத்தையும், தெலங்கானாவின் செகெந்திரபாத்தையும் இணைக்கும் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக இந்த ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இது, இந்தியாவில் இயக்கப்படும் 8-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் என்ற பெருமையை பெருகிறது.

"இந்தியாவின் அடையாளம்"
இந்த 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைத்து, பிரதமர் மோடி பேசுகையில், "புதிய இந்தியாவின் மன உறுதி மற்றும் திறனின் அடையாளமாக விளங்குகிறது 'வந்தே பாரத்' ரயில். உண்மையில் சொல்லப்போனால், இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாகவே வந்தே பாரத் ரயில் மாறிப் போய்விட்டது. தெலங்கானா, ஆந்திராவுக்கு இடையேயான பழமையான கலாச்சார ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த இந்த வந்தே பாரத் ரயில் பெரும் பங்களிப்பை வழங்கும் என நம்புகிறேன்" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications