பில் கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துகளை பரிசளித்த மோடி.. கையில் உள்ள மற்றொரு கிப்ட் என்ன பாருங்க
டெல்லி: பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மைக்ரோசாப்ட் உரிமையாளர் பில் கேட்ஸ் சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடி அவருக்குத் தூத்துக்குடி முத்துகளைப் பரிசாக அளித்தார்.
இந்தியா வந்துள்ள உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் உரிமையாளருமான பில் கேட்ஸ் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மோடியைச் சந்தித்துப் பேசினார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியுள்ளார். ஜி20 உச்சி மாநாடு அனைவரையும் உள்ளடக்கி இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின் போது தூத்துக்குடி முத்துகளை மைக்சோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கு பிரதமர் மோடி வழங்கி உள்ளார். மேலும் களிமண்ணால் செய்யப்பட்ட தமிழ்நாடு குதிரை பொம்மைகளையும் பிரதமர் மோடி பில் கேட்ஸுக்கு பரிசாக வழங்கியதாகக் கூறப்படுகிறது.
சந்திப்பு: இருவருக்கும் இடையே நடந்த இந்தச் சந்திப்பு குறித்த வீடியோவும் பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்தியாவில் நடந்து வரும் டிஜிட்டல் புரட்சி குறித்தும் இருவரும் விவாதித்து உள்ளனர். இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் போது, உலகெங்கும் உள்ள பிரதிநிதிகள் நாட்டில் டிஜிட்டல் புரட்சி குறித்து ஆர்வமாக உள்ளதாகப் பிரதமர் மோடி கூறினார்.
இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியைப் பாராட்டிய பில் கேட்ஸ், இந்தியா தொழில்நுட்பத்தை மாற்றியமைப்பது மட்டுமல்லாமல், அதில் முன்னிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் (AI) முக்கியத்துவம் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
உச்சி மாநாடு: குறிப்பாக 2023 ஜி20 உச்சி மாநாடு, காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் போது ஏஐ தொழில்நுட்பம் எப்படிப் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும் இந்தி பேச்சு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது எப்படி என்பது குறித்தும் பில் கேட்ஸிடம் பிரதமர் விளக்கினார். மோடி தனது சொந்த நமோ செயலியில் ஏஐ பயன்படுத்தப்பட்டது குறித்தும் அவர் பேசினார்.
நாட்டின் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்ததால் முதல் மற்றும் இரண்டாவது தொழில் புரட்சிகளின் போது இந்தியா பின்தங்கியதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இருப்பினும், நான்காவது தொழில்துறை புரட்சி நடக்கும் இந்த காலகட்டத்தைப் பயன்படுத்தி இந்தியா குறிப்பிடத்தக்கப் பலன்களைப் பெறும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

பிரமதர் மோடி: ஏஐ குறித்து பிரதமர் மோடியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர், "ஏஐ ஒரு மேஜிக் கருவி என் நம்புவது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். சோம்பேறித்தனம் காரணமாக அதைப் பயன்படுத்துவது தவறான அணுகுமுறை. ஏஐ உடன் போட்டிப் போட்டுக் கொண்டு இருந்தால் அதுவும் நமது திறமையை அதிகரிக்க உதவும்" என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோல பில் கேட்ஸும் கூட ஏஐ நமக்கு ஏற்படுத்தித் தரும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்துப் பேசினார். பில் கேட்ஸ் கூறுகையில், "ஏஐ இன்னும் ஆரம்ப நாட்களில் இருக்கிறது. கடினமான பணிகளைச் செய்யும் திறன் ஏஐக்கு இருக்கிறது. ஆனால், அதேநேரம் எல்லா வேலைகளையும் ஏஐயால் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. ஏஐ அபரிமிதமான ஆற்றல் இருந்தபோதிலும், இன்னும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications