செம க்யூட்.! அன்பாக ஓடி வந்த வான்ஸ் குழந்தைகள்.. ஆசையாக பிரதமர் மோடி கொடுத்த அன்பு பரிசு.. அடடே
டெல்லி: அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அவரது குடும்பத்தினருடன் பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது பிரதமர் மோடி, வான்ஸ் குழந்தைகளுக்கு ஒரு சர்ப்ரைஸ் பரிசை வழங்கினார். இது தொடர்பான க்யூட் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அமெரிக்க அதிபராக இருப்பவர் ஜே.டி.வான்ஸ். அங்கு அதிபர் டிரம்ப்பிற்கு இவர் பக்கபலமாக இருந்து வருகிறார். அதேநேரம் சர்வதேச நாடுகள் தொடர்பாகப் பணிகளையும் கவனித்து வருகிறார். இந்தியா அமெரிக்கா இடையே இப்போது வர்த்தகப் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், ஜே டி வான்ஸ் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

வான்ஸ்
இதற்கிடையே வான்ஸ் டெல்லியில் 7, லோக் கல்யாண் மார்க் வீட்டில் பிரதமர் மோடியைச் சந்தித்தார். அப்போது ஜேடி வான்ஸ் உடன் தனது குடும்பத்தினரும் உடன் இருந்தனர். இந்தச் சந்திப்பு தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் ஜேடி வான்ஸ் குடும்பத்தினரைப் பிரதமர் மோடி வீட்டு வாசலுக்கே சென்று வரவேற்றார். வான்ஸின் மூத்த மகனைக் கையை பிடித்து அழைத்து வந்தார்.
பிரதமர் மோடி அன்பு பரிசு
முதலில் அவர்கள் அங்குள்ள பூங்காவைச் சுற்றிப் பார்க்கிறார்கள். வான்ஸ் பிள்ளைகளுக்குப் பிரதமர் மோடி விளக்குகிறார். பிறகு அங்கிருந்து வீட்டிற்கு வருகிறார்கள். அங்கு வான்ஸ் குடும்பத்தினர் சிறுவர்கள் பிரதமர் மோடியின் மடியில் அமர்ந்து, ஜாலியாக பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது தான் பிரதமர் மோடி வான்ஸ் பிள்ளைகளுக்கு மயில் இறகைப் பரிசாக அளித்தார். இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.

அடுத்து என்ன
வான்ஸ்- ஜே.டி., உஷா தம்பதிக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் என மொத்தம் மூன்று குழந்தைகள் உள்ளனர். வான்ஸ் தனது குடும்பத்தினர் உடன் இப்போது நான்கு நாள் அதிகாரப்பூர்வப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். இன்றைய தினம் ஜெய்ப்பூர் செல்லும் வான்ஸ் குடும்பத்தினர், நாளை புதன்கிழமை காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு ஒரு பயணம் மேற்கொள்வார்கள்.
முன்னதாக நேற்றைய தினம் வான்ஸ் குடும்பத்தினர் டெல்லியில் உள்ள சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயிலுக்குச் சென்றனர். அப்போது அவர்களின் மூன்று குழந்தைகளும் பாரம்பரிய இந்திய உடையில் அணிந்திருந்தனர். இவான் மற்றும் விவேக் குர்தா அணிந்திருந்த நிலையில், மகள் மிராபெல் அனார்கலியும் பாரம்பரிய உடை அணிந்திருந்தார்.
உஷா வான்ஸ்
துணை அதிபர் வான்ஸின் மனைவி உஷா பாலா சிலுகுரி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.. இவர் ஆந்திராவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய லட்சுமி மற்றும் ராதாகிருஷ்ணா தம்பதிக்கு 1986ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி பிறந்தார். உஷா அமெரிக்காவிலேயே பிறந்ததால்.. அவருக்கு அமெரிக்கக் குடியுரிமை கிடைத்தது. அவரது தந்தை ஐஐடி மெட்ராஸில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்தவர். அவர் சான் டியாகோ மாநில பல்கலைக்கழகத்திலும் வேலை செய்துள்ளார். அவரது தாயார் சான் டியாகோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயாலஜிஸ்ட் ஆக இருந்தவர்.
இந்தியா அமெரிக்கா உறவு
அமெரிக்க அதிபர் டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்திருந்தார். அதற்குள் அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் போடும் முயற்சியில் உலக நாடுகள் இறங்கியுள்ளது. குறிப்பாக இந்தியா தீவிரமாகப் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாகவே வான்ஸின் இந்தியப் பயணம் அமைந்துள்ளது. இதில் வர்த்தகம் சார்ந்து மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications