கஜா சேதத்தை பார்க்கல, விவசாயிகளை பார்க்கல.. பிரியங்கா ரிசப்ஷனுக்கு மட்டும் சென்ற பிரதமர் மோடி!
பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி சென்றது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

டெல்லி: பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி சென்றது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரண்டு நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், இந்திய பிரதமர் பதவி என்றால் சாதாரண பதவி கிடையாது அதில் நிறைய சிரமம் இருக்கிறது. அவருக்கு நிறைய பணிச்சுமை இருக்கிறது.
அதனால்தான் மோடி கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை வந்து பார்க்கவில்லை. அவரை மக்கள் குறை கூற வேண்டாம் என்று கூறினார்.

ஆனால் சந்தித்தார்
ஆனால் பிரதமர் மோடி நேற்று பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார். அங்கு அவர் 1.30 மணி நேரம் வரை செலவிட்டார். பிரியங்காவின் உறவினர்கள், நிக் ஜோனஸ் எல்லோரிடமும் பேசினார். பின் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படம் வைரலாகி உள்ளது.

மோடி மோசம்
ஆனால் பிரதமர் மோடி டெல்லியில் கடந்த ஒரு வருடமாக மாறி மாறி போராடி வரும், விவசாயிகளை இதுவரை ஒருமுறை கூட சந்திக்கவில்லை. எந்த ஒரு விவசாயியின் கோரிக்கையையும் இதுவரை அவர் காது கொடுத்து கேட்கவில்லை. இப்படி சினிமா துறையினர், கிரிக்கெட் வீரர்களை சந்திப்பது, இல்லையென்றால், தேர்தல் பிரச்சாரம் செய்வது என்று செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்.

கஜா புயல்
முக்கியமாக பாஜகவை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மோடிக்கு, கஜா புயல் சேதங்களை பார்க்க நேரமில்லை என்று கூறினார். ஆனால் பிரியங்கா சோப்ரா திருமண விழாவிற்கு செல்ல மட்டும் நேரம் இருக்கிறதா என்று மக்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீங்களும்
இவர் ''மோடி: அடிக்கடி இந்தியாக்கு வந்துட்டு போங்க.. பிரியங்கா: நீங்களும்தான்..பிளீஸ்'' என்று மோடியின் வெளிநாட்டு பயணங்களை கிண்டல் செய்துள்ளார்.
சரி சரி சரி
இவர் ''ஏழைத்தாயின் மகன் ஏழைகளுடன் அருகில்! '' என்று கிண்டல் செய்துள்ளார்.
எப்போது சார்
இவர் ''கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க எப்ப சார் வருவீங்க?'' என்று கேட்டுள்ளார்.
நல்ல முடிவு
இவர் ''நாட்டுக்கு முக்கிய, அவசியமான வேலையை செய்தார் பிரதமர். பிரியங்கா சோப்ரா திருமண வரவேற்பு வையத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.'' என்றுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications