ஊரே எதிர்த்தாலும்... இந்தி மொழியில் மருத்துவக் கல்வி தொடங்கப்பட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டு!
டெல்லி: மத்திய பிரதேசத்தில் இந்தி மொழியில் மருத்துவ கல்வி தொடங்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தி அதிகாரப்பூர்வ அலுவல் மொழி. அம்மாநிலத்தில் இந்தி மொழியில் மருத்துவ கல்விக்கான பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

தாய் மொழி கல்வி
பொதுவாக இந்தியாவில் தாய்மொழிக் கல்வியை அனைத்து மாநிலங்களும் வரவேற்கின்றன. அதனை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன. அந்த வகையில் இந்தி மொழி பேசுகிற மத்திய பிரதேசத்தில் இந்தி மொழியில் மருத்துவ பாடப் புத்தகங்கள் வழங்குவது பாராட்டப்பட வேண்டியது; ஆனால் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை மட்டும் திணிக்கக் கூடாது என்பதுதான் மாநிலங்கள் வலியுறுத்துகின்றன.

அமித்ஷா குழு பரிந்துரை
அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் ஆய்வு மொழிக் குழு, இந்தி பேசாத மாநிலங்களில் அனைத்து மத்திய அரசின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியை கட்டாயமாக்க வேண்டும் என பரிந்துரைத்தது. அதேபோல் வேலைவாய்ப்புகளிலும் இந்தி மொழி அறிவு கட்டாயமாக்க வேண்டும் என்கிறது அமித்ஷா குழு பரிந்துரை.

இந்தி பேசாத மாநிலங்கள் எதிர்ப்பு
இப்பரிந்துரைக்கு இந்தி பேசாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுத்தன. தமிழகம், மேற்கு வங்கத்தில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இரு மாநிலங்களிலும் ஆளும் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் இந்தி திணிப்பு போராட்டத்தை நடத்தின. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதமும் அனுப்பி இருந்தார்.

பிரதமர் மோடி பாராட்டு
இந்தப் பின்னணியில் இந்தி மொழியில் மருத்துவக் கல்வி தொடங்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் இந்தி மொழி மருத்துவ பாடப் புத்தகங்களை தொடங்கி வைத்த நிகழ்வை பதிந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ட்வீட்டைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி, ட்வீட் செய்துள்ளார்; இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை, லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அவர்களின் சொந்த மொழியில் மருத்துவம் படிக்கவும், நாட்டில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தவும் உதவும். இது மாணவர்களுக்கு பல வாய்ப்புகளை திறக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications