Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 ஆண்டில் 21 நாடுகளுக்கு சென்ற மோடி.. ரூ.22.76 கோடி செலவாம்! 86 நாடுகள் பறந்த அமைச்சர் ஜெய்சங்கர்

2019 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 21 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி சென்று இருக்கிறார். இதற்காக ரூ.22.76 கோடி செலவிடப்பட்டு உள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக மீண்டும் வெற்றிபெற்று 2வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து இன்று வரை 4 ஆண்டுகளில் மொத்தம் 21 வெளிநாடுகளுக்கு மோடி சென்று இருப்பதாகவும், இதற்காக ரூ.22.76 கோடி செலவிடப்பட்டு உள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் மாநிலங்களவையில் தெரிவித்து இருக்கிறார்.

குடியரசுத் தலைவர், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆகியோரின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாகவும், அதற்கான செலவு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி முரளிதரன் எழுத்துப் பூர்வமாக மாநிலங்களவையில் பதிலளித்து இருக்கிறார்.

குடியரசுத் தலைவர், பிரதமர் செலவு

குடியரசுத் தலைவர், பிரதமர் செலவு

அதில், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் குடியரசுத் தலைவர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்காக மத்திய அரசு ரூ.6 கோடியே 24 லட்சம் நிதியை செலவு செய்து இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்காக மொத்த ரூ.22 கோடியே 76 லட்சம் நிதி செலவிடப்பட்டு உள்ளதாக ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப் பூர்வ பதிலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

வெளியுறவுத் துறை அமைச்சருக்கான செலவு

வெளியுறவுத் துறை அமைச்சருக்கான செலவு

அதேபோல், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் வெளிநாட்டு பயண செலவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்காக மொத்தம் ரூ.20 கோடியே 87 லட்சம் செலவிடப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார். அமைச்சர் ஜெய்ஷங்கரை பொறுத்தவரை கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இன்று வரை மொத்தம் 86 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

8 முறை குடியரசுத் தலைவர் பயணம்

8 முறை குடியரசுத் தலைவர் பயணம்

குடியரசுத் தலைவரை பொறுத்தவரை கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மொத்தம் 8 வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில் 7 வெளிநாட்டு பயணங்களை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செய்து இருக்கிறார். தற்போது குடியரசுத் தலைவராக இருக்கும் திரௌபதி முர்மு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரட்டன் ராணி 2 ஆம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அந்நாட்டுக்கு மட்டும் ஒருமுறை வெளிநாட்டு பயணம் சென்று உள்ளார்.

 21 முறை பிரதமர் மோடி பயணம்

21 முறை பிரதமர் மோடி பயணம்

பிரதமர் நரேந்திர மோடியை பொறுத்தவரை கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 21 வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.கொரோனா முதலாவது மற்றும் இரண்டாவது அலையின் காரணமாக இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் இந்த 4 ஆண்டுகளில் 2 ஆண்டுகள் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்லவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+