"ஐடியா" சொல்லுங்களேன்.. 91வது "எபிசோட்" வர போகிறது.. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
மன் கி பாத் நிகழ்ச்சியின் 91-வது பதிவுக்கு, யோசனைகள் வழங்கும்படி பிரதமர் கேட்டுள்ளார்
டெல்லி: வரப்போகும் மன் கி பாத் நிகழ்ச்சியின் 91-வது பதிவுக்கு, யோசனைகள் வழங்கும்படி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2014-ல் பிரதமராக பதவியேற்றதில் இருந்து, மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு ஆல் இந்தியா ரேடியோ மூலமாக 'மனதின் குரல்' என்ற நிகழ்ச்சியின் வாயிலாக நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார்.
இந்த மன் கி பாத் நிகழ்ச்சியானது, கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி தொடங்கப்பட்டதாகும்.. இதில், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விஷயத்தை பற்றி பிரதமர் எடுத்துரைப்பார்..

திடீர் போன்
மருத்துவம், நீர் மேலாண்மை, கொரோனா பாதுகாப்பு என பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பேசி வருகிறார்... பெரும்பாலும், இந்த நிகழ்ச்சியில் அப்போதைய சூழ்நிலை முக்கிய மைய கருத்தாக இடம் பெற்று இருக்கும்... இதில் பலமுறை தமிழகத்தின் சிறப்புகளையும், பெருமைகளையும் மோடி எடுத்துரைத்து பாராட்டி உள்ளார்.. அதேபோல, தமிழக நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வரும் சாமான்ய மக்களுக்கும் திடீரென பிரதமர் போனை போட்டு வாழ்த்திய நிகழ்வுகளும் உண்டு.

புது எபிசோட்
அந்தவகையில் அனைத்து தரப்பு இந்திய மக்களிடமும், இந்த நிகழ்ச்சி கவர்ந்து வருகிறது.. முக்கிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவிட்டுள்ளது.. இப்போது, வருகிற ஜூலை 31-ம் தேதி, மன் கி பாத்தின் 91-வது எபிசோட் நடக்க உள்ளது.. நடைபெற உள்ள தன்னுடைய மாதாந்திர வானொலி நிகழ்ச்சிக்கு, மக்கள் தங்கள் யோசனைகளையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்...

ஷேர் செய்யுங்கள்
இதுகுறித்து பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில், "இந்த மாதத்தின் மன் கி பாத் 31-ம் தேதி நடைபெற உள்ளதா? அவற்றைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன். MyGov அல்லது NaMo App இல் உங்கள் கருத்துகளை பகிரவும். 1800-11-7800 ஐ டயல் செய்து உங்கள் யோசனைகளைப் பதிவு செய்யவும்" என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து, MyGov ஆப் சார்பிலும் ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஐடியா தரலாம்
அதில், "வரவிருக்கும் மன் கி பாத் எபிசோடில் பிரதமர் பேச விரும்பும் கருப்பொருள்கள் அல்லது சிக்கல்கள் குறித்து உங்கள் ஆலோசனைகளை எங்களுக்கு அனுப்பவும். இந்த திறந்த மன்றத்தில் உங்கள் கருத்துக்களை எங்களிடம் பகிரவும்... அல்லது அதற்கு மாற்றாக 1800-11-7800 என்ற கட்டணமில்லா நம்பரை டயல் செய்யலாம். பிரதமருக்கான உங்கள் செய்தியை இந்தி அல்லது ஆங்கிலத்தில் பதிவு செய்யுங்கள்... பதிவு செய்யப்பட்ட சில கருத்துகள் ஒளிபரப்பின் ஒரு பகுதியாக மாறக்கூடும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications