“யசோபூமி”.. டெல்லியில் மோடி திறந்து வைக்கும் பிரமாண்டம்! இப்படி அரங்கத்தை பார்த்தே இருக்க முடியாது
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளான இன்று யசோபூமி என்ற பெயரில் மிகப்பெரிய மாநாட்டு அரங்கத்தை தலைநகர் டெல்லியில் இன்று திறந்து வைக்க உள்ளார். அதில் இருக்கும் சிறப்புகள் என்ன? விரிவாக பார்ப்போம்.
தலைநகர் டெல்லியில் யசோபூமி என்ற பெயரில் சர்வதேச மாநாட்டு அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதன் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்ததை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளான இன்று அதை திறந்து வைக்க உள்ளார். அத்துடன் துவாரகா செக்டார் 21 முதல் துவாரகா 25 புதிய மெட்ரோ ரயில் நிலையம் வரையிலான டெல்லி விமான நிலையம் மெட்ரோ எkஸ்பிரஸ் லேனையும் பிரதமர் மோடி மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.

டெல்லியில் இன்று பிரதமர் மோடியால் திறக்கப்பட இருக்கும் யசோபூமி மாநாட்டு அரங்கம் பல்வேறு சிறப்பம்சங்களுடன் கண்கவரும் கட்டிட கலையோடு காட்சியளிக்கிறது. துவாரகா பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள உலகத் தரம் வாய்ந்த இந்த யசோ பூமி மாநாட்டு மையம் அமைக்க ரூ.4,400 கோடி செலவிடப்பட்டு இருக்கிறது.
73 ஆயிரம் சதுர மீட்டர் பரந்து விரிந்த பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த யசோ பூமி மாநாட்டு மையத்தில் 15 மாநாட்டு அரங்குகள் உள்ளன. இதில் மைய மண்டபமும் அடக்கம். இதில் பிரமாண்டமான 2,500 சிறப்பு விருந்தினர்கள் தங்கும் வகையிலான ராட்சத பால்ரூம் மற்றும் 11 ஆயிரம் பேரை உள்ளடக்கக் கூடிய 13 ஆலோசனை அறைகளும் உள்ளன.
இதன் கண்காட்சி மையத்தின் பரப்பளவு 1.07 லட்ச, சதுர மீட்டர் ஆகும். உலகளவிலான பல்வேறு சர்வதேச கூட்டங்கள், மாநாடுகள், கண்காட்சிகள் போன்றவற்றை நடத்தும் வகையில் இது பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கட்டிடத்தின் மேலேயே வைக்கப்பட்டு இருக்கும் ராட்சத LED திரை இதனை மேலும் அழகாக்கி இருக்கிறது.
இதன் முழு அரங்கமும் 6000 பேர் அமரும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி இதை திறந்து வைத்த பிறகு மதியம் 3 மணிக்கே இது செயல்பாட்டுக்கு வருகிறது. மெட்ரோ ரயில் மூலம் எளிதில் வந்து செல்லும் வகையிலேயே அருகில் மெட்ரோ நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
வாகனங்கள் நிறுத்துவதற்கு மிகப்பெரிய பார்க்கிங் ஏரியா ஒதுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக கார்களை நிறுத்த நிலத்தடியில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டு இருக்கிறது. அதில் 3,000 கார்களை வரை நிறுத்த முடியும். குறிப்பாக எலெக்ட்ரிக் கார்களுக்காக 100 எலெக்ட்ரிக் சார்ஜிங் போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. நவீன இருக்கை வசதிகள், அதி நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் பிரமாண்டமாக காட்சி தருகிறது இந்த யசோ பூமி.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications