அனுமன் போல உழைக்கிறது பாஜக.. 'சமூக நீதி'யில் காங்கிரஸ் வெறும் வாய்தான்.. போட்டு தாக்கிய பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜகவின் 44வது ஸ்தாபன தினமான இன்று கட்சி தொண்டர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார். அதில், "காங்கிரஸ் சமூக நீதி குறித்து தொடர்ந்து பேசி மட்டும்தான் வருகிறது. ஆனால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூக நீதியை சாத்தியமாக பாஜக முயன்று வருகிறது" என்று கூறியுள்ளார்.

ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி பாஜகவின் ஸ்தாபன தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 44வது ஸ்தாபன தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை நாடு முழுவதும் 8 நாட்கள் கொண்டாட வேண்டும் என்று பாஜக கட்சி தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையில் சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ் பூலேவின் பிறந்த நாள் வருகிறது. அதையும் கட்சியினர் கொண்டாடுகின்றனர். இறுதியாக ஏப்ரல் மாதம் 14ம் தேதி அம்பேத்காரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் பாஜக ஸ்தாபன தின கொண்டாட்டமும் நிறைவடைகிறது.

PM Modi is proud that it is the BJP that is truly trying to implement social justice

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த ஸ்தாபன தின கொண்டாட்டத்தின் வாயிலாக கட்சியின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க பாஜக திட்டமிட்டுள்ளது. எனவேதான் இதனை 8 நாட்கள் விழாவாக கொண்டாட கட்சி திட்டமிட்டிருக்கிறது. இன்று காலை கட்சி அலுவலகத்தில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கொடியேற்றி வைத்தார். இதனையடுத்து 36 மாநிலங்களிலும் உள்ள தலமை அலுவலகங்களில் கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

மோடி பேச்சு

இதனையடுத்து தேசிய தலைமை அலுவலகத்தில் உரையாற்றி பிரதமர் நரேந்திர மோடி, "காங்கிரஸ் சமூக நீதி குறித்து தொடர்ந்து பேசி மட்டும்தான் வருகிறது. ஆனால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூக நீதியை சாத்தியமாக பாஜக முயன்று வருகிறது. பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் அனைத்து இறுதி முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் 2024ம் ஆண்டு தேர்தலில் பாஜகவை யாராலும் வீழ்த்த முடியாது. நமது நாட்டில் அனுமான் வீரத்தின் கடவுளாக, போர் குணம் மிக்க கடவுளாக வணங்கப்படுகிறது.

அனுமான்

பாஜகவும் ஏறத்தாழ அனுமானை போன்று பல சவாலர்களை சந்தித்து வருகிறது. நாங்கள் அனுமானிடமிருந்து உத்வேகத்தை பெருகிறோம். இந்த உத்வேகத்தோடு நாடு முழுவதும் உள்ள சட்டம் ஒழுங்கு, ஊழல் உள்ளிட்டவற்றை எதிர்த்து அனுமானை போன்று உறுதியாக போராடி வருகிறோம்.
இருப்பினும் எங்களுக்கு இரக்க குணமும் உண்டு. காங்கிரஸ் உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் ஊழல், சாதிவெறி மற்றும் குடும்ப அரசியலில் சிக்கி தவித்து வருகின்றன" என்று கூறியுள்ளார். இவரது பேச்சை கேட்க நாடு முழுவதும் 10 லட்சம் இடங்களில் பாஜக ஸ்கிரீனை ஏற்பாடு செய்திருந்தது.

கட்சி

1984ம் ஆண்டு வெறும் 2 எம்பிக்களில் தொடங்கிய பாஜகவின் கணக்கு தற்போது 303 எம்பிக்களாக உயர்ந்திருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக இரண்டாவது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வருகிறது. மேலும் மற்றொரு 5 ஆண்டுகள் தங்களது ஆட்சியை நீட்டிக்க பல்வேறு யூகங்களையும் கட்சி வகுத்திருக்கிறது. 2019ம் ஆண்டு தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 303 இடங்களை கைப்பற்றிய பாஜக 20204ம் ஆண்டு தேர்தலை பல சவால்களுன் எதிர்கொண்டு வருகிறது. காரணம் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி உருவாகியிருப்பதாக உளவுத்துறை தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேருவுக்கு அடுத்து

PM Modi is proud that it is the BJP that is truly trying to implement social justice

அதேபோல எதிரக்கட்சிகள் கடந்த காலத்தை விட தற்போது வலுவடைந்துள்ளன. மாநில கட்சிகளும் பலம் வாய்ந்த சக்தியாக உருவாக்கியுள்ளன. இந்த சவால்களை சமாளிப்பதோடு இந்த முறை 400 தொகுதிகளில் வெற்றி பெற்று விட வேண்டும் என்று பாஜக தனது வியூகங்களை கூர்மையாக்கி வருகிறது. இந்த வெற்றி சாத்தியமானால் பிரதமர் நரேந்திரமோடிக்கு பிறகு இரண்டாவது முறையாக தொடர்ந்து 3 முறை பிரதமராக பதிவியேற்றவர் என்கிற பெருமைய பிரதமர் நரேந்திர மோடி பெருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+