சீனாவுக்கு செக்! அரிய கனிமங்கள் விஷயத்தில் இந்தியா எடுத்த முக்கிய ஸ்டெப்! G20 மாநாட்டில் முன்னேற்றம்
டெல்லி: தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அரிய கனிமங்கள் விஷயத்தில் சீனா போன்று ஒரே ஒரு நாட்டை மட்டும் நம்பிக்கொண்டிருப்பதை தவிர்க்க புதிய யோசனையை முன்வைத்திருக்கிறார். இது அனைத்து நாடுகளாலும் ஏற்கப்பட்டால், விரைவில் இந்தியா கனிம வளர்ச்சியில் முக்கிய இடத்தை அடையும்.
பூமியில் மிக குறைந்த அளவே இருக்கும் லந்தனைடு, ஸ்காண்டியம், இட்ரியம் போன்ற கனிமங்கள்தான் அரிய கனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த கனிமங்களைக் கொண்டு சக்தி வாய்ந்த காந்தங்களை உருவாக்கலாம். இவை மின்சார வாகனங்கள் மற்றும் ராணுவ ஆயுத அமைப்புகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல ஸ்மார்ட் ஃபோன்கள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க், டிவி, எல்இடி விளக்குகள், எம் ஆர் ஐ ஸ்கேனர்கள் ஆகியவற்றை தயாரிக்கவும் இந்த கனிமங்கள் பயன்படுகின்றன.

பிரச்சனை என்னவெனில் உலக அளவில் இந்த கனிம உற்பத்தியில் ஏறத்தாழ 90 சதவீதம் அளவுக்கு சீனா தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் வர்த்தகப் போர் சமீபத்தில் தொடங்கிய நிலையில், சீனா தனது பலத்தை காட்ட.. அரிய கனிமங்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிப்பதாக அறிவித்தது. இது அமெரிக்காவை மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளையும் கடுமையாக பாதித்தது.
குறிப்பாக இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உற்பத்தி சரிவை எதிர்கொண்டது. இனிமேல் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய முடியாது என்கிற அளவுக்கு இந்திய ஆட்டோமொபைல் துறை சீனாவின் தடையால் பாதிக்கப்பட்டது. இதையெல்லாம் பாடமாக எடுத்துக் கொண்ட இந்தியா இனி அரிய கனிமங்கள் உற்பத்தியில் சீனாவை மட்டும் நம்பி இருக்கக் கூடாது என்று முடிவெடுத்தது.
இப்படி இருக்கையில் தான் ஜி20 உச்சி மாநாட்டில் முக்கியமான கனிமங்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருக்கிறார். அதாவது அரிய கனிமங்களுக்கு தனி நாடுகளை சார்ந்து இருக்காமல், ஏற்கனவே தங்கள் நாடுகளில் இருக்கும் மின்னணு கழிவுகளில் இருந்து லித்தியம், கோபால்ட், நிக்கல் மற்றும் அரிய மண் தனிமங்களை பிரித்தெடுப்பதை செய்ய வேண்டும். இதற்கான தொழில் நுட்பத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று மோடி வலியுறுத்தியுள்ளார்.
இப்படி செய்வதன் மூலம் எதிர்காலத்தில் சீனா கனிமங்களை விற்க தடை விதித்தாலும் கூட அந்த பாதிப்பு நமக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. அதேபோல ஜி20 நாடுகள் இந்த மறுசுழற்சி தொழில்நுட்பங்களுக்கான தரநிலைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை உருவாக்கினால், சீனாவுக்கு வெளியே ஒரு பொதுவான சந்தையை அமைக்க முடியும். இப்படி செய்வதன் மூலம் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
-
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி












Click it and Unblock the Notifications