மோடிக்கு பைபை.. 2019 தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மாற்றப்படுகிறாரா? டாப்பில் உள்ள அந்த நபர்
2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது.
Recommended Video

டெல்லி: 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது.
கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பிரதமர் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் பாஜக பெரிய வெற்றியை சந்தித்தது.
இந்த நிலையில் இதேபோல் 2019 தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது. இது குறித்து அரசியல் விவாதங்கள் பலவும் நடந்து வருகிறது.

ராகுலை அறிவிக்க வாய்ப்பு
2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெரிய கூட்டணி அமைக்க முயன்று வருகிறது. இந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் இப்போதே நடந்து வருகிறது.

மோடி இல்லை
இந்த நிலையில்தான் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது. மோடிக்கு பதிலாக அந்த கட்சி வேறு ஒருவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். பாஜகவில் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வருகிறது.

காரணம் என்ன
2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் பாஜக பெரிதாக எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை. முக்கியமாக மக்கள் பாஜக மீது ஏற்கனவே டிமானிடைசேஷன் உள்ளிட்ட பல விஷயங்களால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் பிரதமர் மோடிதான் காரணம் என்ற கருத்து நிலவுவதால் அவருக்கு பதிலாக வேறு ஒரு நபரை பாஜக பிரதமர் வேட்பாளராக நிறுத்த வாய்ப்புள்ளது.

ஏற்கனவே பிரச்சனை
ஏற்கனவே பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேற தொடங்கி உள்ளது. சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் மோடிக்கு எதிரான மனநிலையை கொண்டு இருக்கிறது. இதனால் கூட்டணி கட்சிகளின் நற்பெயரை பெறவும், அந்தக் கட்சிகளை கூட்டணியில் தக்க வைத்துக் கொள்ளவும் வசதியாக மோடிக்கு பதிலாக வேறு ஒருவரை பாஜக தேர்தலில் முன்னிறுத்த வாய்ப்புள்ளது.

யார்?
இந்த நிலையில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக யார் வருவார் என்றும் கூட சில விவாதங்கள் நடந்து வருகிறது. மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஒருசாரர் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் பேசி வருகிறார்கள்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்?












Click it and Unblock the Notifications