ம.பி விசிட் முடிந்து வந்ததும் அத்வானி வீட்டுக்கு நேரில் சென்ற பிரதமர் மோடி.. கூடவே அமித் ஷா!
டெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானி இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து பாஜகவின் உயர்ந்த பதவிகளை அலங்கரித்தவர் அத்வானி. பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டும் என்பதற்காக அத்வானி தொடங்கிய ரத யாத்திரை பல இடங்களில் பரபரப்பைக் கிளப்பியது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட கரசேவை கலவர விவகாரத்திலும், முக்கிய முகமாகப் பேசப்பட்டவர் அத்வானி. அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது துணை பிரதமராகவும் பொறுப்பு வகித்தார் அத்வானி.
நரேந்திர மோடி, பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் அத்வானி. அதன்பின், பாஜக தலைவர்களின் அமோக ஆதரவுடன் மோடி பிரதமரான நிலையில், அத்வானி முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டார். பின்னர், வயது முதிர்வு காரணமாக, தனது அரசியல் பங்களிப்பை தவிர்த்து விட்டார் அத்வானி.
இன்று அத்வானிக்கு 96வது பிறந்தநாள். இதையொட்டி, நாடு முழுவதுமுள்ள பல்வேறு தலைவர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியும் தனது சமூக வலைதள பக்கத்தில், "அத்வானியின் தொலைநோக்கு மிக்க தலைமை தேசிய முன்னேற்றத்தை மேம்படுத்தியுள்ளது. தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக அவர் எடுத்த முயற்சிகள் 140 கோடி இந்தியர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளைப் பெற வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று பிரச்சார பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி சென்ற பிரதமர் மோடி, அத்வானியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்து பூங்கொத்து கொடுத்து, பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், அத்வானியின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரும் அத்வானி இல்லத்திற்குச் சென்று வாழ்த்து தெரிவித்தனர். அத்வானி குடும்பத்தினர் இந்தச் சந்திப்பின்போது உடன் இருந்தனர்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications