பிரதமர் மோடி சுற்றுப்பயண அறிவிப்பிலும் ‘இந்தியா’ இல்லை.. ‘பாரத்’.. அடுத்த ‘ஷாக்’ கொடுத்த பாஜக அரசு!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாளை இந்தோனேஷியா புறப்படும் நிலையில் அதுகுறித்த நிகழ்ச்சி நிரலில் 'பாரத்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜி20 அழைப்பிதழில் பாரத குடியரசுத் தலைவர் என பெயர் மாற்றப்பட்ட நிலையில் பிரதமர் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பிலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பெயரை "பாரத்" என மாற்றம் செய்யும் மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக குடியரசுத் தலைவரின் சார்பில் ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இரவு விருந்து அழைப்பிதழில் President of Bharath எனப் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான்- இந்தியா மாநாடு மற்றும் 18வது கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை இந்தோனேசியா செல்ல உள்ள நிலையில், பிரதமர் மோடியின் பயணம் தொடர்பான நிகழ்ச்சி நிரல் அறிவிப்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா இன்று, பிரதமர் நரேந்திர மோடியின் இந்தோனேசியா பயணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள பிரதமர் மோடியின் பயண நிகழ்ச்சி நிரலில் 'பாரதப் பிரதமர்' (Prime Minister of Bharat) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா மற்றும் பாரத் என இரண்டு வார்த்தைகளும் இருந்தாலும், இதுவரை பிரைம் மினிஸ்டர் ஆப் இந்தியா, பிரசிடென்ட் ஆப் இந்தியா என்று தான் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு வந்தது. ஆனால், திடீரென இதில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது மத்திய பாஜக அரசு. இந்தியா என்ற வார்த்தைக்குப் பதிலாக பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்த தொடங்கியிருக்கிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர். 'இந்தியா' என்ற பெயரை கூட்டணிக்கு வைத்துள்ளதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், 'இந்தியா' என கூட்டணிக்கு பெயர் வைக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் தான் தற்போது இந்தியா என்ற நாட்டின் பெயரை 'பாரத்' என மாற்ற பாஜக அரசு தீவிரமாக முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. இந்தியா என்ற வார்த்தைக்கு மாற்றாக 'பாரத்' என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ்ஸின் தொடர் குரலாக உள்ள நிலையில், அதனை இப்போது பாஜக அரசு அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த தொடங்கியிருக்கிறது.
இது எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தோல்வி பயத்தில் இதுபோன்று செய்வதாகவும், 9 ஆண்டுகளில் இந்தியாவின் பெயரை மற்றுமே பாஜகவால் மாற்ற முடிந்திருக்கிறது என்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications