குழந்தைகளோடு குழந்தையான பிரதமர் மோடி.. நாணயத்தை வைத்து மேஜிக்? இணையத்தை கலக்கும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாணயத்தை வைத்து மேஜிக் செய்து காட்டுவது போல குழந்தைகளோடு பிரதமர் மோடி விளையாடும் காட்சி இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

பிரதமர் மோடி தனது பரபரப்பான வேலைகளுக்கு மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பார். வெளிநாட்டு தலைவர்களுடனான சந்திப்பு குறித்து பதிவிடுவது, பண்டிகை காலங்களில் நாட்டு மக்களுக்கு வாழ்த்து சொல்வதாக இருக்கட்டும் உடனுக்கு உடன் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை காண முடியும். அதேபோல், சர்வதேச விளையாட்டுக்களில் இந்தியாவுக்கு பெருமை கிடைக்கும் தருணங்களிலும் மறக்காமல் பிரதமர் மோடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

PM Modi perform magic trick for young children visiting his office

நேற்று கூட விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் யாராலும் தொட முடியாத 50-வது சதம் என்ற சாதனையை நிகழ்த்திய சில நிமிடத்திலேயே வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் தன்னை சந்தித்த குழந்தைகளிடம் மேஜிக் செய்வது போல பிரதமர் மோடி விளையாடும் வீடியோவை பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சில நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோ, "குழந்தைகளோடு குழந்தையாகும் மோடி" என்ற தலைப்பில் பதிவிட்டப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், பிரதமர் மோடி தனது நெற்றியில் நாணயம் ஒன்றை ஒட்டி வைத்து விட்டு, தனது பின்னந்தலையில் தட்டி நாணயத்தை கீழே வைத்து கையால் பிடிக்கிறார். பின்னர் அதேபோன்று குழந்தைகள் நெற்றியில் நாணயத்தை ஒட்டுவது போல் பாவலா செய்து விடுகிறார். குழந்தைகளும் தலையில் தட்டினால் நாணயம் விழும் என நினைத்து தட்டுகின்றன.

ஆனால், நாணயம் விழவில்லை. நாணயம் ஒட்டி வைத்ததாக நினைத்த குழந்தைகள் நாணயம் விழாததை பார்த்தது திரு திருவென விழிக்கின்றன. இப்படி குழந்தைகளுடன் பிரதமர் மோடி ஜாலியாக விளையாடும் காட்சிகள் அதில் இடம் பெற்று இருக்கின்றன. இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள குழந்தைகள் குறித்த விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. பிரதமர் மோடி ஒரு குழந்தையைப் போன்றே உற்சாகமாக அவர்களுடன் விளையாடி மகிழ்வது பாஜகவினரால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+