சிக்கிய 200 கோடி.. மக்களிடம் கொள்ளையடித்த ஒவ்வொரு ரூபாயையும் திருப்பி வழங்காமல் விட மாட்டோம்: மோடி
டெல்லி: ஒடிஷா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி வீடு, தொழிற்சாலைகளில் பீரோக்களில் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 200 கோடி ரொக்கமும் மக்களுக்கே திருப்பி தரப்படும் என பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் எம்பி தீரஜ் சாஹூவுக்கு சொந்தமான பவுத் டிஸ்டில்லரி பிரைவேட் லிமிடெட் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஒடிஷா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் தீரஜ் சாஹூவுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒடிஷாவில் புவனேஸ்வர், சம்பல்பூர், பொலாங்கீர், திதிலாகர், பவுத், சுந்தர்கார், ரூர்கேலா ஆகிய இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்றன.

இச்சோதனைகளின் போது தீரஜ் சாஹூவுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ200 கோடிக்கும் அதிகமான ரொக்கம் மட்டுமே சிக்கியது வருமான வரித்துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த பணத்தை எண்ணும் பணிகளில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டன. முதலில் 8 பணம் எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு எண்ணப்பட்டன. பின்னர் மேலும் 3 இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது.

இந்த விவகாரத்தில் மேலும் பல காங்கிரஸ் எம்பிக்களுக்கு தொடர்பிருக்கலாம் என்பதால் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என பாஜக தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பான படங்களைப் பதிவிட்டு எழுதி இருப்பதாவது: நமது நாட்டு மக்கள் இதனைப் பார்க்க வேண்டும். நேர்மையாளர்களாக, நேர்மையின் முகமாக தங்களை காட்டிக் கொண்டு இத்தகைய தலைவர்கள் பேசுவதை கேட்க வேண்டும். மக்களிடம் இருந்து திருடப்பட்டது இந்த பணம். மக்களிடம் திருடப்பட்ட, கொள்ளையடிக்கப்பட்ட இந்த பணம் மக்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும். இது மோடியின் வாக்குறுதி. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications