பிரமாண்டம்! புதிய நாடாளுமன்றத்தின் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி! மக்களுக்கு வேண்டுகோள்.. ரெடியா?
டெல்லி: டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (மே 28) திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் பிரமாண்ட வீடியோவை இன்று பிரதமர் மோடி வெளியிட்ட நிலையில் பொதுமக்களுக்கு சிறப்பு வேண்டுகோள் ஒன்றையும் வைத்துள்ளார்.
டெல்லியில் புதிதாக நாடாளுமன்றம் கட்ட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து கடந்த 2000ல் அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் ரூ.970 கோடி செலவில் பிரமாண்டமாக நாடாளுமன்ற கட்டடம் கட்டும் பணி தொடர்ந்து நடந்து வந்தது.

4 தளங்களுடன், 1,224 பேர் அமரும் வகையில் புதிய நாடாளுமன்றம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த கட்டடம் முக்கோண வடிவில் பரந்து விரிந்துள்ளது. இந்த கட்டடத்தில் தகவல் மையம், பொதுமக்கள் காத்திருக்கும் பகுதி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நாளை மறுநாள் பிரதமர் மோடி இந்த கட்டடத்தை திறந்து வைக்க உள்ளார். இந்த கட்டடத்தை ஜனாதிபதி திரெளபதி முர்மு தான் திறந்து வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இதற்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் தான் காங்கிரஸ், திமுக உள்பட 19 கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன.

இதற்கிடையே தான் பிரமாண்டமாக கட்டப்பட்டள்ள புதிய நாடாளுமன்றத்தின் வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மொத்தம் 1.48 நிமிடங்கள் வரை ஓடும் அந்த வீடியோவில் நாடாளுமன்றத்தின் முழு தோற்றமும் காட்டப்பட்டுள்ளது. வீடியோவில் நாடாளுமன்றம் பிரமாண்டமாகவும், கம்பீரமாகவும் காட்சியளிக்கிறது.
இந்நிலையில் தான் அந்த வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் வைத்துள்ளார். அதில் ‛‛புதிய நாடாளுமன்ற கட்டடம் என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை அளிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த வீடியோவுடன் புதிய நாடாளுமன்ற கட்டடம் தொடர்பான உங்களின் எண்ணங்களை பின்னணி குரலுடன் அதிகம் பகிர வேண்டும். இவ்வாறு பகிரும் வீடியோக்களில் நான் சிலவற்றை ரீ-ட்வீட் செய்வேன். இந்த பதிவுகளை MyParliamentMyPride என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட மறந்து விட வேண்டாம்'' என தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த கோரிக்கையை தொடர்ந்து பாஜகவினர் உள்பட பல்வேறு தரப்பு மக்கள் MyParliamentMyPride எனும் ஹேஷ்டேக்கில் இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடம் தொடர்பான வீடியோவை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications