சுதந்திர தினம்: யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி வீடியோ.. புதிய சாதனை!
டெல்லி: யூடியூப்பில் திரைப்படம் சார்ந்த வீடியாக்கள் மட்டுமே டிரெண்ட் ஆகி முதலிடம் பிடிக்கும் நிலையில் முதல் முதலாக பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தினம் கொண்டாட்டம் சார்ந்த வீடியோக்கள் டிரெண்ட் ஆகி டாப் இடத்தை பிடித்து சாதித்துள்ளன.
Recommended Video
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்ற தினத்தை சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறோம். இந்தியா விடுதலை பெற்றதன் 75 வது ஆண்டு கொண்டாட்டம் ஓராண்டுகளாக நடைபெற்றது.
இதையடுத்து நேற்று நாடு முழுவதும் 76-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் ஆகஸ்ட் 13 முதல் நேற்று வரை வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி தேசப்பற்றை நிரூபித்தனர்.

வீரபெண்களை நினைவுக்கூறிய மோடி
நேற்றைய சுதந்திர தினவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். இந்த உரையில் பல்வேறு விஷயங்கள் பற்றி பிரதமர் மோடி பேசினார். பெண்கள் சுதந்திர போராட்ட தியாகிகளை பாராட்டினார். ராணி லட்சுமிபாய், ஜல்காரி பாய், துர்கா பாபி, ராணி கெய்டின்லியு, ராணி சென்னம்மா, பேகம் ஹஸ்ரத் மஹால், வேலு நாச்சியார் என இந்தியாவின் வீர பெண்மணிகள் பற்றி அவர் பாராட்டினார்.

பிரதமர் மோடி பேச்சு
மேலும், நாட்டில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலான வார்த்தைகள் சாதாரணமாக பயன்படுத்தப்படுகிறது. இது வேதனையளிக்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். நமது அன்றாட வாழ்வில் பெண்களை இழிவுபடுத்தும் செயல்களை யாரும் செய்யக்கூடாது என உறுதிமொழி எடுக்க வேண்டும். நாட்டின் கனவுகளை நிறைவேற்றுவதில் பெண்களின் பெருமை ஒரு பெரிய சொத்தாக இருக்கும். பெண்களின் பாதுகாப்பு, அடுத்த 25 வருடங்களுக்கான இந்தியாவின் இலக்கு என பேசினார்.

யூடியூப்பில் முதலிடம் பிடித்த வீடியோ
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய வீடியோ பிரதமரின் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பிரதமர் மோடியின் உரை, சுதந்திர தின நிகழ்வை அதிகளவில் மக்கள் பார்த்தனர். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின விழாவுக்கான வீடியோ யூடியூப்பில் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்தது.

எவ்வளவு பேர் பார்த்தனர்?
பிரதமர் மோடி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளும் வீடியோவை 20 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். மேலும் அவர் தேசியக்கொடியை ஏற்றியது உள்ளிட்ட சுதந்திர தின விழா தொடர்பான வீடியோக்களை இன்று மாலை வரை 4.4 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். யூடிப்பை பொறுத்தமட்டில் திரைப்படம் டிரைலர், பாடல் தொடர்பான வீடியோக்கள் தான் டிரெண்ட் ஆவது வழக்கம். ஆனால் நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின விழா தொடர்பான வீடியோ டிரெண்ட் ஆகி முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications