டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் மோடியின் மன் கி பாத் வீடியோ.. யூ டியூபில் 5.4 லட்சம் பேர் டிஸ்லைக்.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையை யூ டியூபில் பலர் டிஸ்லைக் செய்துள்ளனர். முக்கியமாக மாணவர்கள் பலர் மோடி உரையை டிஸ்லைக் செய்துள்ளனர்.

பிரதமர் மோடியை நேற்று வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். பிரதமர் மோடி எல்லா மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்கள் முன் வானொலியில் பேசுவது வழக்கம்.

இந்த நிகழ்ச்சியில் மோடி முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருப்பார். இதில் நிறைய தகவல்களை அவர் பகிர்ந்து கொள்வார். நேற்று ஆத்ம நிர்பார் திட்டம் குறித்து பிரதமர் மோடி நேற்று தனது உரையில் பேசினார்.

லடாக்கில் என்ன நடந்தது? அவசரமாக மீட்டிங் நடத்திய பிரதமர் மோடி.. விளக்கம் அளித்த அதிகாரிகள்! லடாக்கில் என்ன நடந்தது? அவசரமாக மீட்டிங் நடத்திய பிரதமர் மோடி.. விளக்கம் அளித்த அதிகாரிகள்!

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு இருந்தார். முக்கியமாக தமிழகத்தை புகழ்ந்து பேசி இருந்தார். தமிழகத்தில் தயாரிக்கப்படும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளை வாங்க வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகளை வாங்க வேண்டும். பொம்மை உற்பத்தியை ஆதரிக்க வேண்டும்.

இந்தியா முக்கியம்

இந்தியா முக்கியம்

இந்தியர்கள் சொந்த தயாரிப்புகளை வாங்க வேண்டும். அதேபோல் நாய்களில் கூட ராஜபாளையம் நாய், சிப்பி நாய் போன்ற இந்திய இனத்தை சேர்ந்த நாய்களை வாங்க வேண்டும். இந்தியாவில் இளைஞர்கள் செயலிகளை உருவாக்கி வருகிறார்கள். நாம் நிறைய ஆண்ட்ராய்ட் செயலிகளை உருவாக்க வேண்டும். அதற்கான திறமை நம்மிடம் இருக்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தார்.

டிஸ்லைக்

டிஸ்லைக்

பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில் பலரை பாராட்டி இருந்தாலும் கூட அவரின் வீடியோவிற்கு யூ டியூபில் பலரும் டிஸ்லைக் செய்துள்ளனர். பாஜக கட்சி யூ டியூபில் இந்த மன் கி பாத் எபிசோடை பதிவேற்றம் செய்துள்ளது. இதற்கு மொத்தம் 5.4 லட்சம் டிஸ்லைக் செய்துள்ளனர். 84 ஆயிரம் பேர் இதை லைக் செய்துள்ளனர்.வீடியோவை 21 லட்சம் பேர் பார்த்த நிலையில் 25% பேர் இதை டிஸ்லைக் செய்துள்ளனர்.

Recommended Video

    NEET, JEE தேர்வுகளுக்கு எதிராக ஒன்றிணையும் முதல்வர்கள்.. உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு
    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    பொதுவாக பிரதமர் மோடியின் வீடியோக்களுக்கு இப்படி டிஸ்லைக் வருவது அரிது. நேற்று இப்படி டிஸ்லைக் வர காரணம் நீட் தேர்வாக இருக்கலாம் என்கிறார்கள். பிரதமர் மோடி நீட் தேர்வு குறித்து எதுவும் பேசவில்லை. கொரோனாவிற்கு இடையே நீட் தேர்வுகளை வைப்பது மாணவர்களை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இதனால் மாணவர்கள் பளார் இந்த வீடியோவை டிஸ்லைக் செய்துள்ளனர்.

    English summary
    PM Modi's Maan Ki Baat speech gest 5.4 lakhs dislikes in YouTube that posted yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X