மோடியின் மாஸ்டர் பிளான்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்த ஜாக்பாட் அறிவிப்பு.. ஆஹா லிஸ்ட்லயே இல்லையே!
டெல்லி: ரேஷன் அட்டை மூலம் இலவச பொருட்களை பெற்று வரும் பயனாளிகளுக்கு மத்திய அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் ரேஷன் பொது விநியோக திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் பல்வேறு மாற்றங்கள் தேசிய அளவில் பல மாநிலங்களில் கவனம் பெற தொடங்கி உள்ளன.

பிற மாநில அரசுகளும் இந்த திட்டங்களை பின்பற்ற தொடங்கி உள்ளன. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசு, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அட்டை ரீதியாக வழங்கப்பட்டது. அட்டையை பொறுத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறி வருகின்றது.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தினை 01.10.2020 முதல் அமல்படுத்துவதற்கான அரசாணை தமிழ்நாடு அரசு மூலம் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில்தான் ரேஷன் அட்டை மூலம் இலவச பொருட்களை பெற்று வரும் பயனாளிகளுக்கு மத்திய அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. மத்திய அரசின் திட்டப்படி அந்த்யோதயா அட்டைதாரர்களுக்கு மட்டும் இந்த சேவை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு இலவச ரேஷன் பொருட்களுடன் சேர்த்து இலவச சிகிச்சையும் அளிக்கப்படும்.
இதற்காக இலவச ஆயுஷ்மான் சிகிச்சை அட்டைகள் அவர்களுக்கு அளிக்கப்படும். அந்த அட்டைகளை பயன்படுத்தி, குறிப்பிட்ட மருத்துவ மையங்களில் மக்கள் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும். முதல் கட்டமாக உத்தர பிரதேசத்தில் சில மாவட்டங்களில் சோதனை முயற்சியில் இந்த வசதி கொண்டு வரப்பட உள்ளது.
அதன்பின் நாடு முழுக்க விரிவுபடுத்தப்பட உள்ளது. இலவச பொருட்கள் வாங்கும் ரேஷன் அட்டைகளை கொண்டவர்கள் மட்டும் அந்த கார்டுகளை காட்டி ஆயுஷ்மான் கார்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்போது உபியில் சில மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு பின்னர் நாடு முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக இது விரிவுபடுத்தப்படும்.
வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் இந்த திட்டம் பொருந்தும் என்று கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் மத்திய அரசு மூலம் ரேஷன் பணிகள் பலவும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தியாவில் ரேஷன் கார்டுகள் 100% டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அதாவது எல்லா ரேஷன் அட்டைகளும் டிஜிட்டல் அட்டைகளாக மாற்றப்பட்டுவிட்டதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
நாட்டில் 19 கோடியே 72 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ளன. இவை எல்லாம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டதாக மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். மேலும் 99% ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 1 சதவிகிதமும் விரைவில் இணைக்கப்படும் மத்திய அரசு தெரிவித்துள்ளது,
ஆதார் கார்ட் இப்போது இந்தியாவில் அடிப்படை அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல துறைகளில் சேவைகளை பெற ஆதார் கார்ட் அவசியம் ஆகிவிட்டது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது. மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்ட் முக்கியம் ஆகி உள்ளது.
சமீபத்தில் கூட பான் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில்தான் ரேஷன் அட்டைகளை ஆதாருடன் 99 சதவிகிதம் இணைத்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications