மேட்டரே வேற.. புதிய நாடாளுமன்ற “டிசைன்” உதயசூரியன் இல்லையாம்.. தாமரையாம்! மோடியே சொல்லிட்டாரு
டெல்லி: புதிய நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை இருக்கைகளின் வடிவமைப்பு திமுகவின் உதயசூரியன் சின்னம்போல் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அது தாமரை வடிவில் உருவாக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்து உள்ளார்.
டெல்லியில் கடந்த 3 ஆண்டுகளாக பழைய நாடாளுமன்ற வளாகம் அருகிலேயே புதிய நாடாளுமன்றத்தை கட்டும் பணி நடைபெற்று வந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி முக்கோண வடிவிலான இந்த புதிய நாடாளுமன்ற பணிகளுக்காகு அடிக்கல் நாட்டி வைத்தார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சம்பிரதாயப்படி இன்று புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்து இருக்கிறார். இன்று காலை புதிய நாடாளுமன்றத்துக்கு வந்த பிரதமர் மோடி முன்னிலையில் ஹோம பூஜைகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து கர்நாடகா சிருங்கேரி மடத்தினர் கணபதி ஹோமத்துடன் திறப்பு விழா பூஜை வேத மந்திரங்கள் ஓதினர்.
அதன் தொடர்ச்சியாக தமிழில் தேவாரம், திருவாசகம் ஓதப்பட்டது. ஆதீனங்கள் வழங்கிய செங்கோலுடன் மக்களவைக்குள் சென்ற பிரதமர் மோடி நெடுஞ்சான்கிடையாக அதன் முன் மண்டியிட்டு மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் இருக்கை அருகே செங்கோலை நிறுவினார்.
இஸ்லாம், கிறிஸ்துவம், புத்தம் உள்ளிட்ட பல மதங்களின் சார்பில் சர்வ மத பிரார்த்தனை புதிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் பிரம்மிப்பூட்டும் வீடியோவை பகிர்ந்து இருந்தார். அதில் புதிய நாடாளுமன்றம் பல கோணங்களில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
டிரோன் பார்வையில் முக்கோன வடிவிலான நாடாளுமன்ற கட்டிடம், மக்களவை மற்றும் மாநிலங்களவை அரங்குகள் வெளியிடப்பட்டன. அதன் இருக்கை அமைப்பை மேலிருந்து பார்க்கையில் திமுகவின் சின்னமான உதயசூரியன்போல் இருப்பதாக கூறி வந்தனர். பலர் இதனை பதிவிட்டு உள்ள நிலையில் பழைய நாடாளுமன்ற இருக்கை அமைப்பும் இதேபோன்றே உள்ளது என பலர் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது, லோக் சபாவில் இந்தியாவின் தேசிய பறவையான மயில் போன்ற அமைப்பை போன்றும், ராஜ்ய சபாவில் இந்தியாவின் தேசிய மலரான தாமரையின் உருவ அமைப்பை போன்றும் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications