தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தி.. நாட்டை பிரித்தாள விரும்புகிறது காங்கிரஸ்.. பிரதமர் மோடி
டெல்லி: காங்கிரஸ் கட்சி இந்தியாவை பிரித்தாளும் சூழ்ச்சியை விரும்புவதால் தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறது என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அவர் தனது உரையில், அடுத்த 100 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் ஆட்சி வராது என தீர்மானித்துவிட்டது.
பாதுகாப்புத் துறையில் நிலுவையில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க நாம் முயற்சித்து வருகிறோம். நமது இளைஞர்கள், செல்வத்தை உருவாக்குபவர்கள். தொழில்முனைவோரை பயமுறுத்தும் அணுகுமுறையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

ஆலோசனைகள்
'மேக் இன் இந்தியா' பற்றிய ஆலோசனைகளை ஒருவர் பெறலாம். மேக் இன் இந்தியா தோல்வியடையும் என்று எந்த மனநிலையில் கூற முடியும்? மேக் இன் இந்தியா' என்று கேலி செய்பவர்கள் தாங்களே நகைச்சுவையாக மாறிவிட்டனர். பணவீக்கம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது இதுகுறித்த கேள்விகளை எழுப்பியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

கொரோனா தொற்று
கொரோனா தொற்றின் போது கூட பணவீக்கத்தை கையாள பாஜக அரசு முயற்சித்தது. கடந்த 2014- 2020 -ஆம் ஆண்டு காலகட்டத்தில் பணவீக்கம் 5 சதவீதத்திற்கும் குறைந்திருக்கிறது. காங்கிரஸின் கொள்கையே பிரித்தாளும் சூழ்ச்சி செய்வதுதான். இது போன்று சூழ்ச்சி செய்யும் சிறிய சிறிய கும்பலின் தலைவராகிவிட்டது காங்கிரஸ்.

வறுமையை நீக்குவோம்
வறுமையை நீக்குவோம் என பிரச்சாரம் செய்து, காங்கிரஸ் கட்சி அப்போது ஆட்சியை பிடித்தது. ஆனால் அதன் பிறகு இந்த நாட்டின் ஏழை மக்களே அவர்களை ஆட்சியிலிருந்து வெளியேற்றினர். விவசாயிகளை வலுப்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் விவசாயிகளின் வேதனைகளையும் வலியையும் தெரியாத சிலர் அவர்கள் பெயரில் அரசியல் செய்ய எந்த உரிமையும் இல்லை.

குளிர் காய நினைக்கும் காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி, தமிழர்களின் உணர்வுகளை சீண்டி அதன் மூலம் குளிர்காய நினைக்கிறது. ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்பி நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தவும் விரும்புகிறது. ஏனெனில் பிரிவினை என்பது காங்கிரஸின் மரபணுவில் இருக்கிறது. விமான விபத்தில் இறந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் உடலுக்கு தமிழக மக்கள் அஞ்சலி செலுத்தினர். இதற்காக இந்த நேரத்தில் தமிழக மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன் என்றார் நரேந்திர மோடி.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications