டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லடாக் முதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வரை.. எதிரிகளை ஓட ஓட விரட்டிய இந்தியா.. மோடி பெருமிதம்

Google Oneindia Tamil News

டெல்லி: லடாக் முதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வரை பல்வேறு ஊடுருவல்களுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் தெரிவித்தார்.

Recommended Video

    Modi Red Fort Speech: சீனா, பாகிஸ்தானுக்கு நாம் தக்க பதிலடி கொடுத்து வருகிறோம்

    இந்தியாவில் 74ஆவது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

    PM Modi says that soldiers gave a befitting reply to anyone who dared

    இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக அவர் ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

    இதையடுத்து செங்கோட்டைக்கு வந்த அவர் 7ஆவது முறையாக தனது சுதந்திர தின விழா உரையை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில் கொரோனா போராளிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட 3 தடுப்பு மருந்துகள் டெஸ்டிங் செய்யும் நிலையில் உள்ளன.

    தியாகிகள் பென்ஷன்... ரூ. 16000த்தில் இருந்து ரூ. 17000ஆக உயர்வு... முதல்வர் உத்தரவு!! தியாகிகள் பென்ஷன்... ரூ. 16000த்தில் இருந்து ரூ. 17000ஆக உயர்வு... முதல்வர் உத்தரவு!!

    விஞ்ஞானிகள் தடுப்பு மருந்து சோதனைக்கு பச்சை கொடி காட்டிவிட்டால் அந்த பணிகள் தொடங்கப்படும். எல்லை கட்டுப்பாட்டு பகுதி முதல் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) எல்லை கோட்டு பகுதி வரை (லடாக்) இந்திய மண்ணை ஆக்கிரமிப்பு செய்வோருக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார்கள் என்றார்.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், உரி, பால்கோட் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் ஊருடுவிய போது இந்திய வீரர்கள் புறமுதுகிட்டு ஓட செய்தார்கள். மேலும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கையும் இந்திய வீரர்கள் நடத்தினர். அது போல் லடாக்கில் பாங்சோ ஏரி பகுதியில் சீன படைகள் ஆக்கிரமித்துள்ளன. இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியபோது, பதிலுக்கு இந்தியாவும் தாக்கியதால் 40 சீன படை வீரர்கள் பலியாகினர். அது போல் ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

    English summary
    PM Narendra Modi says that soldiers gave a befitting reply who dares from Pakistan and China.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X