அச்சுறுத்தும் கொரோனா.. இந்தியாவில் கட்டுப்பாடுகள் வருமா? உயர்நிலைக் குழுவுடன் இன்று மோடி ஆலோசனை
டெல்லி: இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்து உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, இந்தியாவில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் பரவி வரும் ஒமிக்ரான் வகை வைரஸ்கள் இந்தியாவில் கண்டறியப்பட்ட சூழலில், பிரதமர் நரேந்திர மோடியின் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

மீண்டும் பயமுறுத்தும் சீனா
கொரோனா பெருந்தொற்று இத்துடன் முடிந்துவிட்டது என உலக நாடுகள் அனைத்தும் நிம்மதி பெருமூச்சு விட்ட சூழலில், சீனாவில் மீண்டும் அதிவேகம் எடுத்திருக்கிறது கொரோனா பரவல். மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு வீரியமிக்க கொரோனா வைரஸ்கள் சீனாவில் பரவி வருவதாக கூறப்படுகிறது. வைரஸ் காய்ச்சலுக்கு அங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். மருத்துவமனைகள் நோயாளிகளாலும், இடுகாடுகள் சடலங்களாலும் நிரம்பி வழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனா மட்டுமல்லாமல் ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் முந்தைய காலங்களை போல அதிகரித்துள்ளது.

இந்தியாவிலும் சீன வகை கொரோனா
சீனாவில் மீண்டும் கொரோனா பரவுவதால் இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக, நாடு முழுவதும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சளி மாதிரிகள் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் சீனாவில் வேகமாக பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் BF.7 மற்றும் BF.12 வகை ஒமிக்ரான் கொரோனா வைரஸ்கள் இந்தியாவைச் சேர்ந்த 4 பேரை தாக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரத் துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது.

இன்று மோடி ஆலோசனை
இந்த சூழலில்தான், நாட்டில் கொரோனா நிலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். சுகாதாரத் துறைச் செயலர், உள்துறைச் செயலர், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். முன்னதாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பொது இடங்களில் மக்களை முகக்கவசம் அணிய வைப்பது, கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

"முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்"
இந்நிலையில், மோடி தலைமையிலான உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க சுகாதாரத் துறை என்னென்ன நடவடிக்கைளை எடுக்கப் போகிறது? ஒருவேளை, கொரோனா பரவல் அதிகரித்தால் அதை சமாளிக்க மருத்துவமனைகள் தயார்நிலையில் இருக்கின்றனவா? விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன? என்பன உள்ளிட்ட விஷயங்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டம் முடிவடைந்ததும் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications