டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உச்சத்தில் கொரோனா.. தடுக்க என்ன வழி.. மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு உச்சமாக இருந்து வரும் நிலையில் இன்று மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த லாக்டவுன்கள் அமல்படுத்தப்பட்டன. இந்த லாக்டவுன்கள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது- தொடர்ந்து 4-வது இடத்தில் இந்தியா

சென்னையில் மீண்டும் லாக்டவுன்

சென்னையில் மீண்டும் லாக்டவுன்

ஆனால் கொரோனாவின் பாதிப்பு முன்பைவிட மிக அதிகமாக உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் மீண்டும் லாக்டவுன் அமலாக்கப்பட உள்ளது. இதேபோல் பிற மாநிலங்களிலும் லாக்டவுன் மீண்டும் அமலாக்கம் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

மோடி இன்று ஆலோசனை

மோடி இன்று ஆலோசனை

இந்த நிலையில் கொரோனா பாதிப்புகள் தொடர்பாக மாநிலங்களின் முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பாதிப்பு தொடங்கியது முதல் மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்துகிற 6-வது ஆலோசனை கூட்டம் இது.

21 மாநில முதல்வர்கள்

21 மாநில முதல்வர்கள்

செவ்வாய்க்கிழமையன்று பிற்பகல் முதலாவது ஆலோசனைக் கூட்டம் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடைபெறுகிறது. இதில் 21 மாநிலங்களின் ஆளுநர்கள், முதல்வர்கள் பங்கேற்கின்றனர். பஞ்சாப், கேரளா, கோவா, உத்தரகாண்ட், ஜார்க்கண்ட் மற்றும் வடகிழக்கு மாநில முதல்வர்கள் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுஉள்ளனர்.

Recommended Video

    Chennai உட்பட 4 மாவட்டங்களில் மீண்டும் lockdown... அரசு அதிரடி அறிவிப்பு
    15 மாநில முதல்வர்கள் பங்கேற்பு

    15 மாநில முதல்வர்கள் பங்கேற்பு

    இதனையடுத்து புதன்கிழமையன்று 15 மாநிலங்களின் முதல்வர்கள், ஆளுநர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்துகிறார். மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் புதன்கிழமையன்று பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார்.

    English summary
    Prime Minister Narendra Modi will hold fresh round of talks with CMs on today and tomorrow.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X