டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீவிரமடையும் கொரோனா.. ஜூன் 16,17ல் மீண்டும் மீட்டிங்.. மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

ஜூன் 16,17ல் மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய இருக்கிறார்.

Google Oneindia Tamil News

டெல்லி: ஜூன் 16,17 தேதிகளில் மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய இருக்கிறார்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுக்க ஊரடங்கில் முக்கியமான தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. லாக்டவுன் 5.0க்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

PM Modi to hold meeting with CMs again amid rise in corona cases

நாடு முழுக்க கட்டுப்பாட்டு பகுதியில் மட்டும் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு உள்ளது. ஜூன் 30ம் தேதி வரை கட்டுப்பாட்டு பகுதியில் ஊரடங்கு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த லாக்டவுன் தளர்வு மூன்று கட்டங்களாக அமல்படுத்தப்பட உள்ளது.

முதல் தளர்வு கடந்த ஜூன் 8ம் தேதி கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே அமலுக்கு வந்தது. இதன் மூலம் நாடு முழுக்க ஹோட்டல்கள், கோவில்கள் பல இடங்களில் திறக்கப்பட்டது. லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டாலும் இன்னொரு பக்கம் கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

லாக்டவுன் தளர்வு- மிகமோசமான 2-வது கொரோனா பாதிப்பு அலை இந்தியாவை தாக்கும்- ஜப்பான் ஆய்வு மையம்லாக்டவுன் தளர்வு- மிகமோசமான 2-வது கொரோனா பாதிப்பு அலை இந்தியாவை தாக்கும்- ஜப்பான் ஆய்வு மையம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் 305613 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 146726 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். இந்த நிலையில் ஜூன் 16,17 தேதிகளில் மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய இருக்கிறார்.

இரண்டு கட்டமாக இந்த ஆலோசனை நடக்க உள்ளது. அன்லாக் 1.0 மற்றும் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள் குறித்து ஆலோசனை செய்ய பிரதமர் மோடி முடிவு செய்து இருக்கிறார். பல்வேறு முக்கிய முடிவுகள் இதில் எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

English summary
Unlock 1.0:PM Modi to hold meeting with CMs again amid rise in corona cases in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X