டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்தமானில் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்குப் பரம் வீர் சக்ரா வீரர்கள் பெயரை சூட்டும் பிரதமர் மோடி!

Google Oneindia Tamil News

டெல்லி: அந்தமான் நிக்கோபர் தீவுகளில் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருதுகள் பெற்ற 21 வீரர்களின் பெயரை பிரதமர் மோடி நாளை சூட்டுகிறார்.

இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயரை தீவுகளுக்கு பெயரிடுவது அவர்களுக்கு என்றென்றும் அஞ்சலி செலுத்துவதாக அமையும். பிரதமரின் பெருமுயற்சியின் வெளிப்பாடாக நிஜ வாழ்க்கை பராக்கிரமசாலிகளுக்கு உரிய மரியாதை மற்றும் அங்கீகாரம்

PM Modi to participate in programme to name 21 largest unnamed islands of Andaman

ஜனவரி 23-ம் தேதி பராக்ரம் திவாஸ்-பராக்கிரம தினத்தில், காலை 11 மணிக்கு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்குப் பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயரை சூட்டும் நிகழ்வில் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்வின் போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் கட்டப்படவுள்ள நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்படும் வகையிலான தேசிய நினைவகத்தின் மாதிரியையும் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

நாட்டின் விடுதலைக்காக அந்தமான் சிறையில் ஆயுள் கைதியான பஞ்சாபின் நாயகன் - யார் இவர்? முழு விவரம் நாட்டின் விடுதலைக்காக அந்தமான் சிறையில் ஆயுள் கைதியான பஞ்சாபின் நாயகன் - யார் இவர்? முழு விவரம்

அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் வரலாற்று முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவை போற்றும் வகையில், 2018 ஆம் ஆண்டு தீவுக்கு பிரதமர் சென்ற செய்த போது, ராஸ் தீவுகளுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நீல் தீவு மற்றும் ஹேவ்லாக் தீவு ஷாஹீத் தீவு மற்றும் ஸ்வராஜ் தீவு என மறுபெயரிடப்பட்டது.

PM Modi to participate in programme to name 21 largest unnamed islands of Andaman

நிஜ வாழ்க்கை பராக்கிரமசாலிகளுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதில் பிரதமர் எப்போதுமே உறுதிப்பாட்டுடன் செயல்படுவார். இந்த உணர்வின் வெளிப்பாடாக, அங்குள்ள 21 பெரிய பெயரிடப்படாத தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 பேரின் பெயரைச் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெயரிடப்படாத மிகப்பெரிய தீவுக்கு முதல் பரம் வீர் சக்ரா விருது பெற்றவரின் பெயரும், இரண்டாவது பெரிய பெயரிடப்படாத தீவுக்கு இரண்டாவது பரம் வீர் சக்ரா விருது பெற்றவரின் பெயரும் சூட்டப்படும். தேசத்தின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக இறுதியான உயிர்த்தியாகத்தைச் செய்த நமது மாவீரர்களுக்கு இந்த சிறப்பான நடவடிக்கை என்றென்றும் அஞ்சலி செலுத்துவதாக அமையும். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

English summary
Prime Minister Narendra Modi will participate in a ceremony to name 21 largest unnamed islands of Andaman & Nicobar Islands after 21 Param Vir Chakra awardees on 23rd January at 11 AM via video conferencing. During the programme, Prime Minister will also unveil the model of the National Memorial dedicated to Netaji to be built on Netaji Subhas Chandra Bose Dweep
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X