டிரம்ப் தொடுத்த வர்த்தக போர்.. சிங்கத்தின் குகைக்கே.. செல்லும் மோடி.. அமெரிக்காவிற்கு திடீர் பயணம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத்தில் பங்கேற்க வரும் செப்டம்பரில் அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளார். நியூயார்க் நகரில் இந்தக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது அமர்வின் தற்காலிகப் பேச்சாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தியப் பிரதமர் செப்டம்பர் 26 அன்று காலை உரையாற்றுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான், மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் தலைவர்களும் அதே நாளில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் பொது விவாதத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.

Donald Trump USA

மோடியின் அமெரிக்கப் பயணம்

மோடியின் இந்த அமெரிக்கப் பயணம், இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கியதற்காக அமெரிக்கா 50% வரிகளை விதித்திருக்கும் நேரத்தில் நடைபெறுகிறது. டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.

டிரம்ப் இந்தியா வரி

இந்த உத்தரவுக்குப் பிறகு, இந்தியப் பொருட்களுக்கான மொத்த வரி 50% ஆக உயரும். ஆரம்ப வரிகள் ஆகஸ்ட் 27 அன்று அமலுக்கு வந்த நிலையில், கூடுதல் வரி 21 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வரும். இது அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து இந்தியப் பொருட்களுக்கும் பொருந்தும்.

வரி விதிப்பு மட்டுமின்றி, ரஷ்ய ராணுவ உபகரணங்களை இந்தியா வாங்கியதற்கும் டிரம்ப் அபராதம் விதித்தார். இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் அமெரிக்க தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என டிரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக ஆணை ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வருகிறது. இதற்குள் ஒப்பந்தம் செய்ய மூன்று வாரங்கள் அவகாசம் உள்ளது.

இந்தியா கடும் எதிர்ப்பு - டிரம்ப்

டிரம்ப்பின் இந்த கூடுதல் வரி விதிப்புக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை துரதிர்ஷ்டவசமானது என்றும், இந்தியா தனது தேசிய நலன்களைப் பாதுகாக்கும் என்றும் குறிப்பிட்டது. மேலும், "பல நாடுகள் தங்கள் தேசிய நலனுக்காகச் செய்யும் செயல்களுக்காக இந்தியா மீது கூடுதல் வரி விதிப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டித்தது.

இருப்பினும், இந்த வரிப் பிரச்சினைக்கு மத்தியில், அமெரிக்க வர்த்தகக் குழு ஆகஸ்ட் 25-க்கு முன் இந்தியாவுக்கு வருகை தர உள்ளது.

இந்தியா டிரம்ப் மோதல்

இந்தியா, ரஷ்யா இரண்டு நாடுகளின் பொருளாதாரமும் இறந்து போய்விட்டது.. ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் தங்களின் பொருளாதாரத்தை தாங்களே அழித்துக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்தியாவுடன் அமெரிக்கா மிகக் குறைந்த அளவிலேயே வர்த்தகம் செய்து வருகிறது. ஏனெனில், இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள் உலகிலேயே மிக அதிகமாக உள்ளன. அதேபோன்று, ரஷ்யாவுடனும் அமெரிக்காவுக்கு பெரிய அளவில் வர்த்தகம் இல்லை. ஆகவே, இப்போது இருப்பது இப்படியே இருக்கட்டும். ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மெட்வெடேவ் இன்னும் தன்னை ஜனாதிபதியாக நினைத்துக்கொண்டு வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். அவர் ஆபத்தான பாதையில் செல்கிறார்.. இந்தியா, ரஷ்யா இரண்டு நாடுகளின் பொருளாதாரமும் இறந்து போய்விட்டது.. ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடுமையாக பாதிக்கும் இந்தியா

ஜவுளி, காலணி, ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் போன்ற விலைப் போட்டி மற்றும் பெருமளவு உற்பத்திக்கு பெயர் பெற்ற தொழிலாளர் மிகுந்த துறைகளில் லாப வரம்புகள் குறையும் இந்த துறைகள் பாதிக்கப்படும், ஆர்டர்கள் திசை திருப்பப்படும், வேலைகள் பறிபோகும், மற்றும் ஆலைகள் சுருக்கப்படும். இதன் தாக்கம் சமத்துவமற்றதாக இருக்கும், வருமான ஏற்றத்தாழ்வை அதிகரிக்கும்.

சீனாவின் அதிகப்படியான தொழில்துறை உற்பத்தித் திறன் மற்றும் அமெரிக்க சந்தையை இழந்ததற்கான இழப்பீடாக நமது சந்தைகளில் அவர்கள் மலிவாக பொருட்களை கொட்டுவதற்கான வாய்ப்பையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். மேலும், அதிகரித்த வரி விதிப்பு நமது சீனா+1 இலக்கை பாதிக்கும். உள்நாட்டு வர்த்தகத் தடைகள் மற்றும் அதிக செலவுகள் காரணமாக உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் நுழைவதற்கே நாம் ஏற்கெனவே போராடி வருகிறோம்.

ஆசியான் அல்லது தெற்காசிய போட்டியாளர்களை விட அமெரிக்காவின் அதிக வரியை எதிர்கொள்வது இந்த ஒருங்கிணைப்பை இன்னும் கடினமாக்கும். அமெரிக்கா 50% இறக்குமதி வரியை தொடர்ந்தால், இந்திய ஏற்றுமதியாளர்கள், குறிப்பாக ஜவுளி, ரத்தினங்கள், மின்னணு சாதனங்கள், மருந்துகள் போன்ற துறைகளில் சரியான உத்திகளைக் கையாள வேண்டும் என்று சுப்பாராவ் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+