யாரு பெருசுன்னு அடிச்சுக் காட்டு.. மோடி VS ராகுல்! இணையத்தில் யார் பேமஸ்! பாஜக - காங்கிரஸ் சண்டை
டெல்லி: சமூக வலைதளங்களில் பிரதமர் நரேந்திர மோடி பிரபலமா அல்லது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பிரபலமா என்ற விவாதம் காங்கிரஸ் - பாஜக கட்சியினரிடையே எழுந்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தின்போது எம்பி பதவியை மீண்டும் பெற்று வந்து உரையாற்றிய ராகுல் காந்தியின் பேச்சு பெரும் விவாதப் பொருளானது.

மணிப்பூர் தொடர்பாகவும், மத்திய அரசின் நடவடிக்கை குறித்தும் ராகுல் காந்தி ஆற்றிய உரை நாடு முழுவதும் டிரெண்டானது. நாடாளுமன்றத்துக்கு கம்பேக் கொடுத்த ராகுல் காந்தியின் அந்த உரை, காங்கிரஸுக்கு கம்பேக் கொடுக்கும் அளவுக்கு இருந்ததாக பாராட்டுக்களும் குவிந்தன.
மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மணிப்பூர் வன்முறை குறித்த அவரது கருத்தை கடைசி நேரத்தில் குறுகிய இடைவெளியில் வெளிப்படுத்தியது ஏமாற்றத்தை அளித்தது. இந்த நிலையில் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்ற உரைகளில் எது அதிகளவில் சமூக வலைதளங்களில் பார்வையாளர்களை பெற்றுள்ளது என்ற விவாதம் எழுந்துள்ளது.
அதேபோல் இருவரின் ட்விட்டர் பதிவுகளில் எது அதிக அளவில் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்ற விவாதமும் எழுந்து இருக்கிறது. காங்கிரஸ் வெளியிட்டு உள்ள ஸ்க்ரீட் ஷாட்டில் நாடாளுமன்றத்தின் சன்சாத் டிவியின் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட ராகுல் காந்தியின் உரை 3.41 லட்சம் பார்வையாளர்களையும், பிரதமர் நரேந்திர மோடியின் உரை 2.28 லட்சம் பார்வையாளையும் பெற்று உள்ளது.
ட்விட்டர் பதிவுகளை எடுத்துக்கொண்டால் ராகுல் காந்தியின் கடைசி 30 பதிவுகள் 4 கோடியே 81 லட்சம் ஈர்ப்புகளையும், பிரதமர் நரேந்திர மோடியின் கடைசி 30 பதிவுகள் 2 கோடியே 15 லட்சம் ஈர்ப்புகளையும் பெற்று இருப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த நிலையில் இதற்கு பாஜக பதிலடி கொடுத்து உள்ளது.
பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்குடன் தோராயமாக கடந்த ஒரு மாதத்தில் 79.9 லட்சம் பேர் தொடர்பில் இருந்ததாகவும், ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்குடன் தோராயமாக கடந்த ஒரு மாதத்தில் 23.43 லட்சம் பேர் மட்டுமே தொடர்பில் இருந்ததாகவும் பாஜக தெரிவித்து உள்ளது.
அதேபோல் பிரதமர் மோடியின் பேஸ்புக் கணக்குடன் தோராயமாக கடந்த ஒரு மாதத்தில் 57.89 லட்சம் பேர் தொடர்பில் இருந்ததாகவும், ராகுல் காந்தியின் பேஸ்புக் கணக்குடன் தோராயமாக கடந்த ஒரு மாதத்தில் 28.38 லட்சம் பேர் மட்டுமே தொடர்பில் இருந்ததாகவும் பாஜக தெரிவித்து உள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் பிரதமர் மோடியின் பேஸ்புக் கணக்குடன் தோராயமாக 3.25 கோடி பேர் தொடர்பில் இருந்ததாகவும், ராகுல் காந்தியின் பேஸ்புக் கணக்குடன் தோராயமாக கடந்த ஒரு ஆண்டில் 1.88 கோடி பேர் மட்டுமே தொடர்பில் இருந்ததாகவும் பாஜக தெரிவித்து உள்ளது.
பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் கடந்த ஒரு ஆண்டில் தோராயமாக 75.79 கோடி பார்வையாளர்களை பெற்று உள்ளதாகவும், ராகுல் காந்தியின் யூடியூப் சேனல் தோராயமாக கடந்த ஒரு ஆண்டில் 25.38 கோடி பார்வையாளர்களை பெற்று இருப்பதாகவும் பாஜக தெரிவித்து இருக்கிறது. அதேபோல் இன்ஸ்டாகிராமிலும் ராகுலை விட மோடிக்கே அதிக வரவேற்பு உள்ளது என பாஜக தெரிவித்து உள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications