நெருங்கும் சட்டப்பேரவை தேர்தல்! வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி ம.பி, ராஜஸ்தான் பயணம்
டெல்லி: மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இந்த ஆண்டு நவம்பர்- டிசம்பர் மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று இவ்விரு மாநிலங்களுக்கும் பயணிக்கிறார்.
பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இந்த மாநிலங்களுக்கான பயணத்தை கடந்த 30ம் தேதி முதல் பிரதமர் மோடி துவங்கியுள்ளார். அக்டோபர் மாதம் 6ம் தேதி வரை இந்த மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைக்கவும், தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளவும் பயணத்தை அவர் தொடங்கியுள்ளார்.

அதன்படி நேற்று தெலங்கானா மாநிலத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி முடிவுள்ள திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். அதேபோல ரூ.13,500 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டியுள்ளார். இந்நிலையில், இதனைத் தொடர்ந்து இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.7,000 கோடி, மத்தியப் பிரதேசத்தில் ரூ.19,260 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
ராஜஸ்தானின் சித்தூர்கருக்கு செல்லும் மோடி, அங்கு மெஹசானா-பதிண்டா-குர்தாஸ்பூர் எரிவாயு குழாய் இணைப்பை தொடங்கி வைக்கிறார். அதேபோல அபு சாலையில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் அமைத்துள்ள சமையல் எரிவாயு நிரப்பு நிலையத்தை தொடங்கி வைக்கிறார். கோட்டாவில் தேசிய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐ ஐடி) நிரந்தர வளாகம், பல்வேறு ரயில்வே திட்டங்கள் உள்ளிட்டவற்றையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
அதேபோல மத்திய பிரதேசத்தில், ரூ.11,895 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட தில்லி-வதோதரா விரைவுச்சாலையை மத்திய பிரதேசத்தின் குவாலியரில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மேலும், ரூ.1,880 கோடி மதிப்பிலான 5 சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகள், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இரு மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், நவம்பர்- டிசம்பர் மாதங்களில் அந்த மாநிலங்களுக்குப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications