செம! 26 ரஃபேல் விமானம்! 3 நீர்மூழ்கி கப்பல்! நாளை பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி! இதுதான் முக்கியமே
டெல்லி: 2 நாள் பயணமாக நாளை பிரதமர் மோடி பிரான்ஸ் செல்கிறார். நாளை மறுநாள் நடக்கும் பிரான்ஸ் தேசிய தினவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிலையில் ரூ.90 ஆயிரம் கோடிக்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. குறிப்பாக 26 ரஃபேல், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்கள் இந்தியா வாங்குகிறது.
பிரான்ஸ் நாட்டின் அதிபராக இருப்பவர் இமானுவேல் மேக்ரான். இந்தியா-பிரான்ஸ் இடையே தொடர்ந்து நல்ல உறவு உள்ளது. தற்போதும் இமானுவேல் மேக்ரான் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருகிறார். இந்நிலையில் தான் பிரான்ஸ் நாட்டில் வரும் 14ம் தேதி தேசிய தினம் கொண்டாடப்பட இதில் சிறப்பு அழைப்பாளராக பிரமதர் மோடி பங்கேற்க இமானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனை பிரதமர் மோடியும் ஏற்றுக்கொண்டுள்ளார். அதன்படி நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் புறப்பட்டு செல்ல உள்ளார். ஏற்கனவே மோடி பிரதமான பிறகு 4 முறை பிரான்ஸ் சென்றுள்ள நிலையில் தற்போது 5வது முறையாக அங்கு செல்ல உள்ளார்.

தேசிய தினம்: இந்தியாவில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்கிறார். அங்கு நாளை மறுநாள் (ஜூலை 14)ம் தேதி நடக்கும் அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதில் பிரான்ஸ் மற்றும் இந்திய ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் நடைபெற உள்ளது. மேலும் பிரான்ஸ் நாட்டில் உள்ள நாடாளுமன்ற தலைவர்களை பிரதமர் மாடி சந்திக்கிறார்.
பிரதமர் மோடி உரை: அதோடு அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். அதன்பிறகு ஜூலை 15ல் பிரான்சில் இருந்து புறப்பட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். முன்னதாக பிரான்ஸ் சுற்றுப்பயணத்தின்போது பிரதமர் மோடி அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ரூ.90 ஆயிரம் கோடி: இந்த வேளையில் இந்தியா-பிரான்ஸ் இடையேயான வர்த்தகம், தொழில் உள்பட பல்வேறு துறைகளில் உள்ள உறவுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் இந்தியா-பிரான்ஸ் இடையே ரூ.90 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ரஃபேல் விமானங்கள்: இந்த ஒப்பந்த்தின் கீழ் 26 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்க உள்ளது. இது இந்தியாவின் விமானப்படைக்கு வலு சேர்க்கும். இதில் 22 ரஃபேல் போர் விமானங்கள் சிங்கிள் இருக்கையுடனும், 4 ரஃபேல் போர் விமானங்கள் இரண்டு இருக்கைகளுடன் இருக்கும். இரண்டு இருக்கைகள் கொண்ட ரஃபேல் போர் விமானங்கள் பயிற்சிக்காக பயன்படுத்தப்படும்.
நீர்மூழ்கி கப்பல்கள்: அதோடு கடற்படையை வலுவாக்கும் வகையில் இந்த ஒப்பந்த்ததில் 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்கள் வாங்கப்பட உள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் 75 என்ற திட்டத்தின் கீழ் ஸ்கார்பீன் ஒப்பந்தம் அடிப்படையில் டீசல், மின்சார நீர்மூழ்கி கப்பல்கள் வாங்கப்படும் நிலையில் கடற்படையை வலுப்படுத்தும் வகையில் கூடுதலாக 3 நீர்மூழ்கி கப்பல்கள் பிரான்சிடம் இரந்து வழங்கப்பட உள்ளது.
விருந்து: மேலும் பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டில் தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். இதில் இருநாடுகளின் படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்கும் மோடிக்கு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்து வழங்க உள்ளார். இந்த விழாவில் இந்தியாவில் இருந்து இதற்கு முன்பு கடந்த 2009ல் பிரதமாக இருந்த மன்மோகன் சிங் பங்கேற்று இருந்தார். அதன்பிறகு தற்போது பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications