‛ஆபரேஷன்’.. மருத்துவ படுக்கையில் முகமது ஷமி உருக்கம்.. போட்டோ பார்த்ததும் மோடி கொடுத்த உற்சாகம்
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடது கணுக்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். மேலும் மருத்துவமனையில் படுக்கையில் படுத்து சிகிச்சை பெறும் போட்டோக்களை ஷமி பதிவிட்டு எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக கூறியுள்ளார். இதனை பார்த்த பிரதமர் மோடி, முகமது ஷமியை உற்சாகப்படுத்தி மீண்டு வர வாழ்த்து தெரிவித்த பதிவு அதிக கவனம் பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் முகமது ஷமி. இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக நடந்து முடிந்த 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் அசத்தினார். உலககோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக திகழ்ந்தார்.

அதன்பிறகு முகமது ஷமி காயத்தால் அவதிப்பட்டார். அவரது இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. சிகிச்சையை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.
இதையடுத்து முகமது ஷமி கடந்த மாதம் லண்டனில் சிகிச்சை எடுத்தார். அந்த சிகிச்சை அவருக்கு ஓரளவு மட்டுமே பலன் அளித்தது. இருப்பினும் காயம் முழுவதுமாக குணமாகவில்லை. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மருத்துவமனையில் அவருக்கு இடது கணுக்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
Wishing you a speedy recovery and good health, @MdShami11! I'm confident you'll overcome this injury with the courage that is so integral to you. https://t.co/XGYwj51G17
— Narendra Modi (@narendramodi) February 27, 2024
இதுதொடர்பான போட்டோவை முகமது ஷமி தனத எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், ‛‛வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. இதில் இருந்து குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதை எதிர்நோக்கி உள்ளேன்'' என தெரிவித்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் விரைந்து குணமடைய வேண்டும் என முகமது ஷமிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் முகமது ஷமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது பற்றி அறிந்த பிரதமர் மோடி விரைவாக குணமாகி மீண்டு வர வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரமதர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛நல்ல உடல் நலத்துடன் வேகமாக மீண்டு வர முகமது ஷமிக்கு வாழ்த்துகள். மேலும் தேவையான தைரியத்துடன் உங்களின் காயத்தை நீங்கள் சமாளித்து மீண்டு வருவீர்கள் என நம்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications