பாகிஸ்தான் புதிய பிரதமருக்கு வாழ்த்துடன் அறிவுரை சொன்ன பிரதமர் நரேந்திர மோடி - என்னவா இருக்கும்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி : பாகிஸ்தான் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட ஷெபாஸ் ஷரீபுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பொருளாதார தேக்க நிலைக்கு இம்ரான் கானின் மோசமான அணுகுமுறையே காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்த எதிர்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். கடந்த 3 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்தது.

வெளிநாட்டு சதி

வெளிநாட்டு சதி

இந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதி அன்று பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. அப்போது பேசிய பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பவாத் உசேன், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாக குற்றம்சாட்டினார். இதனை ஏற்ற பாகிஸ்தான் துணை சபாநாயகர், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்து செய்தார்.

 கலைக்கப்பட்ட பாகிஸ்தான் நாடாளுமன்றம்

கலைக்கப்பட்ட பாகிஸ்தான் நாடாளுமன்றம்


இதனை அடுத்து பாகிஸ்தானில் அரசை கலைத்து விட்டு புதிதாக தேர்தலை நடத்த இம்ரான் கான் வலியுறுத்தினார். பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் ஆரிஃப் அல்வி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்ததுடன் இம்ரான் கானே காபந்து பிரதமராக நீடிப்பார் என்றும் 90 நாட்களில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அறிவித்தார்.

 உச்சநீதிமன்றம் தீர்ப்பு

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்ததை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்தது செல்லாது என தீர்ப்பளித்தது. மேலும் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான குடியரசுத் தலைவரின் உத்தரவையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி

இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நள்ளிரவு நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 174 வாக்குகள் விழுந்ததால் அவர் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

புதிய பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப்

புதிய பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப்

இதனை தொடர்ந்து இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் புதிய பிரதமர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை புறக்கணித்துடன் எம்.பி பதவியையும் இம்ரான் கான் கட்சியினர் ராஜினாமா செய்தனர். இதையடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த பிரதமர் தேர்தலில் ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

பாகிஸ்தான் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டு உள்ள ஷெபாஸ் ஷரீஃபுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "பாகிஸ்தானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட எச்.இ.மியான் முஹம்மது ஷேபாஸ் ஷெரீப் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்த பிராந்தியத்தில் பயங்கரவாதம் இல்லாத நிலையையும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையையும் இந்தியா விரும்புகிறது. அதன் மூலம் நமது வளர்ச்சியில் இருக்கும் சவால்களில் கவனம் செலுத்தி, மக்களின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்ய முடியும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+