தாமரையின் "சக்ஸஸ்".. மோடி எழுதின பாட்டு.. இணையத்தை முணுமுணுக்க வைத்த வரிகள்.. சிலிர்த்த பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்று ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநில தேர்தல் ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில், நேற்று முதல், பிரதமர் மோடி எழுதின பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. பயபக்தியுடனும் மகிழ்ச்சியுடனும், துர்காதேவியின் சக்தி மற்றும் கருணைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நான் எழுதிய ஒரு கர்பா பாடலை கேளுங்கள், அவரது ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருக்கட்டும்" என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

நம்முடைய நாட்டில் நவராத்திரி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.. அந்தவகையில், இந்த வருட நவராத்திரி விழா கடந்த 3-ம் தேதி தொடங்கியுள்ளது... இந்த நவராத்திரி விழா முடிந்ததுமே, மறுநாள் 10வது நாள் விஜய தசமி விழா நடைபெறும்.

pm modi garba song goddess durga

பண்டிகை: இதையடுத்து பக்தர்கள் விரதம் மேற்கொண்டு, பண்டிகையை தேசம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள்.. இந்த பண்டிகைகள் வட மாநிலங்களில் தசரா என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது... முக்கியமாக, மேற்கு வங்கம், கர்நாடகாவில் தசரா விழா, கோலாகலமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், நவராத்திரியை முன்னிட்டு, பிரதமர் மோடி "கர்பா" பாடலை எழுதியிருக்கிறார்.. கர்பா என்பது பாரம்பரியமான குஜராத் வகை நடனமாகும்.. வழக்கமாக நவராத்திரி காலத்தில், இந்த நடனம் பல இடங்களில் நடத்தப்படும். எனவேதான், இதுகுறித்து பிரதமர் மோடி பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார். இதனை தன்னுடைய எக்ஸ் சோஷியல் மீடியா பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அந்த பதில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது:

ஆசீர்வாதம்: இது நவராத்திரியின் புனிதமான நாள். அன்னை துர்கை மீதான பக்தியால் ஒன்றுபட்டு பக்தர்கள் பல்வேறு வகைகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர். அன்னையின் சக்தி மற்றும் கருணைக்கு மரியாதை செலுத்தும் வகையில் 'ஆவதி கலாய்' என்ற தலைப்பில் கர்பா பாடல் ஒன்றை எழுதி உள்ளேன். நமக்கு அன்னை துர்கையின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கட்டும்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் நவராத்திரி பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நல்ல நாளில் அனைவரது வாழ்க்கையிலும் வளம் வந்து சேரட்டும்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இதேபோல இன்னொரு பதிவில், இந்த பாடலை பாடிய பாடகர் பூர்வ மந்திரிக்கு, பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருக்கிறார்.. .

வைரல் பாடல்: பிரதமர் மோடியை பொறுத்தவரை, சிறு வயதில் இருந்தே கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். தான் அவ்வப்போது எழுதிய கவிதைகளை, "மன் கி பாத்" உரையின்போது, நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்... அந்தவகையில், இப்போதும் துர்கா தேவிக்கு பாடல் எழுதியிருக்கிறார்..

இன்று ஜம்மு, காஷ்மீர், ஹரியானா மாநில தேர்தல் ரிசல்ட் வெளியாக உள்ளது.. இதுவரை வந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின்படி, காங்கிரசுக்கே அதிக சான்ஸ் இருப்பதாக முடிவுகள் வெளியாகியிருந்தன.. ஆனால், வாக்கு எண்ணிக்கையில் நிலைமை தலைகீழாகி கொண்டிருக்கிறது. பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது.. எனினும். இன்றைய தினம் எப்படி ரிசல்ட் இருக்க போகிறதோ? என்ற ஆர்வம் கடந்த சில தினங்களாகவே ஏற்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், நேற்று முதல் இந்த பாடல்தான் சோஷியல் மீடியாவில் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த பாடலை பலரும் ஷேர் செய்தும் வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+