கோடி கோடியாய் செலவு.. வெளிநாட்டு டூர்.. பிரதமர் மோடிக்காக செலவு செய்தது இத்தனை கோடியா? மயக்கம் வருதே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றிருக்கும் நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து பலமுறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 2022 முதல் 2024 வரை 38 முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் அந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 259 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறி இருக்கிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு முறை வெளிநாட்டு பயணங்கள், அதற்கான ஏற்பாடுகள், செலவு செய்த தொகை உள்ளிட்ட தகவல் வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்திருந்தார்.

tour narendra modi bjp

மேலும் பிரதமர் மோடிக்கு தங்குமிடம், போக்குவரத்து, பிற செலவுகள், வரவேற்பு அளிக்க செய்யப்பட்ட ஏற்பாடுகள் மற்றும் பிற செலவுகள் குறித்து விரிவான விவரங்களை அளிக்க வேண்டும் எனமத்திய வெளியுறவுத் துறையிடம் கேட்டிருந்தார்.

அவரின் கேள்விக்கு மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சரான பபித்ரா மார்கரிட்டா எழுத்துப் பூர்வமாக பதில் தந்திருக்கிறார். அந்த அறிவிப்பின் படி," 2022 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2024 டிசம்பர் மாதம் வரை பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மன், குவைத், அமெரிக்கா, ஜப்பான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு 38 முறை பயணம் செய்திருக்கிறார். இதற்காக இந்திய அரசு சார்பில் 259 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இருக்கிறது.

தங்குமிடம், பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் புற வகை செலவுகள் என்ற அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் தங்குமிடத்துக்காக மட்டும் 104 கோடி போக்குவரத்து செலவாக 71 கோடி, பிற செலவுகளாக 75 கோடி ரூபாயும் செலவிடப்பட்டு இருக்கிறது.

tour narendra modi bjp

தனிப்பட்ட நாடுகளுக்கு மேற்கொண்ட பயண செலவு என்ற அடிப்படையில் அமெரிக்க பயணத்திற்கு 38.2 கோடி, ஜப்பானுக்கு 33 கோடி, ஜெர்மனி பயணத்தின் போது 29.9 கோடி ரூபாயும், ரஷ்ய பயணத்தின் போது 16.1 கோடி ரூபாயும், பிரான்ஸ், இத்தாலி, ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகளுக்கு முறையே 15.7 கோடி, 14.4 கோடி, 12.7 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மூன்று ஆண்டுகளில் அதிகபட்ச செலவாக 2023 ஆம் ஆண்டு அமெரிக்க பயணத்திற்கு மட்டும் 22.89 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும், நேபாள பயணத்திற்காக குறைந்தபட்சமாக 80 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு 8 நாடுகளுக்கும், 2023 10 நாடுகளுக்கும், 2024 16 நாடுகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+