ராகுல் காந்தியுடன் நரேந்திர மோடி.. தலைவர்கள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.. நாடாளுமன்றமே ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முடிந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று தேநீர் விருந்து நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்துக்கட்சி எம்பிக்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இதில் பிரதமர் நரேந்திர மோடியும், ராகுல் காந்தியும் ஒருவருக்கு ஒருவர் புன்னகைத்தபடி, பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து தகவல்கள் இல்லை..

நாடாளுமன்றத்தில் நடைபெற்று வந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் லோக்சபா தலைவர் ஓம் பிர்லா அவையை காலவரையின்றி ஒத்திவைத்தார். இதன் காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது.

Narendra Modi Rahul Gandhi


நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், அதிகாரப்பூர்வமற்ற முறையில் இன்று தேநீர் விருந்து நடந்தது. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இந்த தேநீர் விருந்தில் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். இதில் ஒருவருக்கு ஒருவர் வணக்கம் தெரிவித்துவிட்டு, தங்களுக்கு பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் கேமராக்களுக்கு புன்னகைத்தபடி போஸ் கொடுத்தனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அருகில் இருந்த சோபாவில் சபாநாயகர் ஓம் பிர்லா அமர்ந்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு வலதுபுறம் போடப்பட்டிருந்த நாற்காலியில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அமர்ந்திருந்தார்.

அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, கிஞ்சரபு ராம்மோகன் நாயுடு, சிராக் பாஸ்வான், பியூஷ் கோயல் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சுதிப் பந்தோபாத்யாய், கனிமொழி, துரை வைகோ ஆகியோரும் ராகுல் காந்தியுடன் அதே வரிசையில் அமர்ந்திருந்தனர்.

Narendra Modi Rahul Gandhi


எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அமர்ந்திருந்தனர். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தலைவர்கள் எல்லாருமே ஒருவருக்கு ஒருவர் சிரித்த முகத்துடன் பேசிக்கொணடிருந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பபட்டுள்ளது. அதில்
தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களுக்குள் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்க, ஒரு சர்வர் தேனீர் ட்ரேயுடன் காட்சிக்குள் நுழையும் வகையில் இருந்தது.

Narendra Modi Rahul Gandhi

கடந்த வாரம் வரையிலும் லோக்சபாவில் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் கடுமையான வார்த்தைளால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி பேசினார்கள். இன்று இருவருமே எதிரெதிரே அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்க்கும் போது, இருவருக்கும் இடையேயான கடுமையான தேர்தல் பிரச்சாரம் மற்றும் இரு போட்டிக் கட்சிகளுக்கிடையில் நடந்து வரும் கடுமையான சண்டை ஆகியவற்றுக்கு எந்த சம்பந்தமும் இல்லாதது போல் இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+