ஆப்கானிஸ்தான் நிலவரம்.. பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை அவசர மீட்டிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி ; ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

ஆப்கானிஸ்தானை முழுமையாக தாலிபன்கள் கைப்பற்றிவிட்டதால் அங்குள்ள நிலைமை கவலை அளிக்கும் வகையில் உள்ளது. அங்குள்ள இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.

பல்வேறு நாடுகள் ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகத்தை மூடிவிட்டன. இந்தியாவும் தூதரகத்தை முடிவிட்டது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளம் தங்கள் நாட்டு தூதர்களை பத்திரமாக தனி விமானம் மூலம் அழைத்துக் கொண்டு சென்றுவிட்டன.

அமெரிக்காவோ தங்கள் நாட்டு படையினரை பத்திரமாக அழைத்துக்கொண்டு சென்றுவிட்டது. மிக குறைந்த எண்ணிக்கையிலான அமெரிக்க வீரர்களே ஆப்கானிஸ்தானில் உள்ளனர்.

நாடு திரும்ப முடியவில்லை

நாடு திரும்ப முடியவில்லை

பல்வேறு நாடுகளின் மக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து சொந்த நாடுகளுக்கு செல்ல விமான நிலையத்தை முற்றகையிட்டுள்ளனர். இந்தியர்களும் ஏராளமானோர் அங்கு வசிக்கிறார்கள். அவர்கள் நாடு திரும்புவது எப்போது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

பாகிஸ்தான் ஏற்பு

பாகிஸ்தான் ஏற்பு

ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் ஆட்சியை சீனாவும் பாகிஸ்தானும் அங்கீகரித்துவிட்டன. மற்ற நாடுகள் இன்னமும் அங்கீகரிக்கவில்லை. இந்தியா இந்த விவகாரத்தில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அங்குள்ள இந்தியர்களை மீட்க மட்டும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

காபூலில் தவிக்கும் இந்தியர்கள்

காபூலில் தவிக்கும் இந்தியர்கள்

காபூல் விமான நிலையத்திற்கு விமானங்களை அனுப்பி கொஞ்சம் கொஞ்சமாக இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. ஞாயிறு அன்று 129 பேரை மீட்ட மத்திய அரசு, நேற்றும் படிப்படியாக கொஞ்சம் பேரை மீட்டது. இந்த சூழலில் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

Recommended Video

    Afghan- சிக்கியிருக்கும் இந்துக்கள், சீக்கியர்களுக்கு முன்னுரிமை.. MEA அறிவிப்பு
    மோடி மீட்டிங்

    மோடி மீட்டிங்

    இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வருவதுபற்றி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இனி கூடுதல் விமானங்கள் அனுப்பி ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்கள் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+